TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: தமிழக வெற்றிக் கழக கட்சியில் பதவிகள் பணம் மற்றும் சாதி அடிப்படையில் ஒதுக்கப்படுவதாக, ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TVK Posting: தமிழக வெற்றிக் கழக கட்சியில் பதவி ஒதுக்க, 15 லட்சம் ரூபாய் வரை கேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி பதவிகளுக்கு பணம்?
நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட த.வெ.க தலைமை தீவிரமாகி வருகிறது. கட்சி தொடங்கப்பட்டு வரும் பிப்ரவரி 2-ம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது. தற்போது வரை கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன. மாவட்டம், ஒன்றியம், பேரூர், பகுதி, வட்ட கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. கட்சியிலுள்ள அணிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் பதவிகள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் தமிழக வெற்றி கழகத்தின் வாட்சப் குழுவில் பதவிகள் விலைக்கு தான் வழங்கப்படும் எனவும், நகர செயலாளர் பதவிக்கு ரூபாய் 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை விஜய் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவில் பதிவு செய்து வருகின்றனர். அந்த ஆடியோவில், " பணம் இருந்தால் தான் பதவி என்ன கருமம்டா இது" என ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
">
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வசூல்?
இது இப்படி இருக்க, கடந்த நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்ட முக்கிய பொறுப்பாளர் ஒருவருக்கு பிறந்தநாள். இதனை கட்சி நிர்வாகிகள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதற்காக வாட்ஸ்-அப் குழு மூலமாக ஒவ்வொரு நிர்வாகியும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பதிவிட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளுக்காக சாலை முழுதும் கொடிகள், பேனர்கள், மண்டபம், பிரியானி விருந்து என தடபுடலாக இந்த பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்தநாள் செலவுகளை மண்டபம் ஒருவர், உணவுக்கு ஒருவர், கேக் ஒருவர், கொடி, பேனர் ஒருவர் என ஆளுக்கொரு செலவை ஏற்றுள்ளனர். பணம் செலவு செய்தவர்களுக்கு எல்லாம் எதிர்காலத்தில் கட்சி பொறுப்பு கிடைக்கும் என முக்கிய நிர்வாகியால் கூறப்பட்டுள்ளதாம்.
மேலும், தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்கப்போவதாகவும், எனவே நான் நியமிப்பவர்தான் கட்சி பொறுப்புகளுக்கு வர முடியும் என கூறிவரும் அந்த முக்கிய பொறுப்பாளர் கட்சி பதவிக்கு ஏற்றால் போல் பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதே நிலை தான் கள்ளகுறிச்சி மாவட்டத்திலும் உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். தவெக எனும் கட்சி கட்டமைப்பு ரீதியாக இன்னும் முழுமைபெறாத நிலையில் தற்போதே கட்சி பொறுப்பாளர்கள் பிறந்தநாளுக்கு வசூல், கட்சி பதவிகளுக்கு வசூல் என தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டனர்.
அரசியல் கட்சிகள் விமர்சனம்:
சாதி மற்றும் பணம் அதிகத்துடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகம் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தங்களின் குமுறல்களை ஆடியோவாகவும் பதிவுகளாக தவெக குழுவில் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு பதவிக்கும் பல லட்சங்கள் நிர்ணயம் செய்து வசூல் செய்யும் பணியில் மூத்த நிர்வாகிகள் கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் கட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள்ளேயே இத்தகை நிகழ்வுகள் நடப்பது கட்சி தடம் மாறி செல்கிறது என்பதை வெளிப்படுத்துவதாகவும், மேடையில் வீர வசனம் பேசும் விஜய் தன் முதுகுக்குப் பின் நடப்பதை திரும்பி பார்க்க வேண்டும் என்றும் மற்ற கட்சி நிர்வாகிகள் இணையத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

