மேலும் அறிய

Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல' என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல' என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததுடன், இந்தத் தீர்ப்பு உணர்திறன் இல்லாததை காட்டுகிறது என்றும் கூறியது. ஒரு நீதிபதிக்கு எதிராக இப்படி சொல்லவே வேதனையாக இருக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

11 வயது சிறுமியின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து கால்வாய்க்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய இரண்டு பேர் முயற்சி செய்துள்ளனர். அங்கு சிலர் வந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து போலீசார் பவன், ஆகாஷ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை போக்சோவின் கீழ் கீழமை நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை முயற்சி என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஒரு பெண்ணின் மார்பகத்தைத் தொடுவது, பைஜாமா கயிற்றை அவிழ்ப்பது மற்றும் கால்வாயில் தள்ளிச் செல்ல முயற்சிப்பது ஆகிய செயல்கள் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி எனக் கருதப்படாது என அதிர்ச்சிக்குரிய தீர்ப்பை வழங்கியது.

தயாரிப்பு நிலையை தாண்டி செயல் நிலையை அடைந்திருக்க வேண்டும் எனவும் விளக்கம் அளித்திருந்தது. இது சர்ச்சையான நிலையில் தாமாக முன் வந்து உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு கடும் கண்டனத்தை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.

மேலும், “இந்த தீர்ப்பு குறித்து மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் பதில் அளிக்க வேண்டும். தீர்ப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிராகவும், மனிதாபமற்ற அணுகுமுறையை சித்தரிக்கிறது.

சிறுமிக்கு நிகழும் வன்கொடுமையை தடுப்பதுதான் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர அதனை விட கூடுதல் வேதனையை ஏற்படுத்த கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget