கர்ப்பிணி அமர்ந்திருந்த இருக்கையை எட்டி உதைத்து அவதூறாக பேசிய மருத்துவர்... வைரலாகும் வீடியோ
மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் இருக்கையை எட்டி உதைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சவுந்தர்யாவின் பெற்றோரை அவதூறாக பேசியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி அமர்ந்திருந்த இருக்கையை மருத்துவர் எட்டி உதைத்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள ரயில்வே பீடர் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவர் கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனக்கு காலில் அடிபட்டதால் சிகிச்சைப் பெற நினைத்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் மருத்துவர் பாலகிருஷ்ணன் இருந்துள்ளார். அவர் சவுந்தர்யாவை பரிசோதித்து விட்டு அவசர நோயாளி பிரிவுக்கு சென்று அங்குள்ள படுக்கையில் இருக்குமாறு கூறியுள்ளார்.
காதல் மனைவியை அடித்து துன்புறுத்தும் காவலர்: புகாரில் மெத்தனம் காட்டும் போலீசார்? நடந்தது என்ன?
இதனையடுத்து அவரச நோயாளி பிரிவுக்கு சென்ற சவுந்தர்யாவுக்கு அங்கிருந்த படுக்கை உயரமாக இருந்துள்ளது. இதனால் அருகில் இருந்த மர இருக்கையில் அமர முயன்றார். இதனைக் கண்ட மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் இருக்கையை எட்டி உதைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சவுந்தர்யாவின் பெற்றோரை அவதூறாக பேசியுள்ளார். மேலும் சிகிச்சையளிக்கவும் மறுத்து அங்கிருந்து பாலகிருஷ்ணன் வெளியேறியுள்ளார்.
இன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் கலைதகப்பனாரை மருத்துவர் தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே போ என்று கூறுகிறார்.அரசு இந்த அதிகாரி மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.@Subramanian_ma @RAKRI1 @CMOTamilnadu pic.twitter.com/NpUMEBumCO
— சொட்டதட்டி மா.மு.கார்த்திக். (@MM_karthick_NTK) July 8, 2022
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மருத்துவர் பாலகிருஷ்ணன் மீது விசாரணை தொடங்கியுள்ளது. திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வரும் நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் அவதூறாக பேசுவதும் உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் பணியில் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காதல் மனைவியை அடித்து துன்புறுத்தும் காவலர்: புகாரில் மெத்தனம் காட்டும் போலீசார்? நடந்தது என்ன?
எனவே அதிகாரிகள் திருப்புவனம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்