மேலும் அறிய
Advertisement
காதல் மனைவியை அடித்து துன்புறுத்தும் காவலர்: புகாரில் மெத்தனம் காட்டும் போலீசார்? நடந்தது என்ன?
பெண்ணை காதலித்து திருமணம் செய்து, ஏமாற்றிய காவலர் மீது, நடவடிக்கை எடுக்க, சேலையூர் போலீசார் மறுப்பதாக, புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர், பாக்கியராஜ் ( 29). இவர் சேலையூர் காவல் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, 27 வயதுடைய பெண்ணுக்கும், தாம்பரத்தில் தங்கி பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக சில ஆண்டு காலம் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் நாளடைவில் இருவரும், நண்பர்களாக பழகி, காதலித்துள்ளனர்.
இவர்களின் காதல் கடந்த ஆண்டு நினைவானது. இதனை அடுத்து கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி, பெரியமேடு, சார் பதிவாளர் அலுவலகத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.சென்னை தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் இருவரும் வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வருகின்றனர். திருமணமாகி சில நாட்களிலேயே காவலர் பாக்கியராஜ் தனது மனைவியிடம் தேவையில்லாத சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து சண்டையிட்டு வந்த காவலர் பாக்கியராஜ், நான்கு மாதங்கள் இருவரும், ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அதன்பின், அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுத்து, அவரை, அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
வாரம் ஒருமுறை என் வீட்டிற்கு வருகிறீர்கள் தினமும் வீட்டிற்கு வாருங்கள் என்று கேட்டால், எனக்கு வேலை உள்ளது, நான் அப்படி தான் வருவேன் எனவும், மனைவியை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இருவரும் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தாலும், வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்துள்ளார். வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்ததால், சந்தேகம் அடைந்த மனைவி இதுகுறித்து கேட்ட பொழுது தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணை தகாத வார்த்தையில் பேசியதுடன், அவர் பணிபுரியும், கல்லுாரிக்கு சென்று, தாக்கி உள்ளார்.
இதுக்குறித்து, சேலையூர் உதவி கமிஷனரிடம் புகார் அளித்தும், போலீசார் தரப்பில், காவலர் பாக்கியராஜ் மீது, நடவடிக்கை எடுக்காததால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், போலீசார் விசாரணையில் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் கவனித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion