மேலும் அறிய

Financial Plan: கையில் காசே இல்லை என்ற நிலை வரக்கூடாதா? இதோ உங்களுக்கான எளிதான 7 டிப்ஸ்..!

Financial Plan: நிதி பற்றாக்குறை என்ற பிரச்னையை முற்றிலும் தவிர்க்க, வாழ்க்கையில் தவறாமல் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய கொள்கைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Financial Plan: நிதி மேலாண்மை தொடர்பாக கீழே பட்டியலிடப்பட்டுள்ள 7 ஆலோசனைகளை பின்பற்றினால், நீங்களும் ஒருநாள் நிச்சயம் கோடீஸ்வரனாகலாம் என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தனிநபர் நிதி மேலாண்மை:

ஒவ்வொருவருக்கும் தங்களது வாழ்வில் சொந்த வீடு, குழந்தைகளின் படிப்பு, திருமணம், கார் என தனிப்பட்ட நிதி இலக்குகள் இருக்கும். இவை தவிர, பலருக்கு கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதனை செயல்வடிவம் பெறச் செய்ய, தங்களது நிதி ஆதாரங்களை முடிந்தவரை திறம்பட பயன்படுத்துவது அவசியமாகும். அந்தவகையில் ஒவ்வொரு நபரும் தங்களது நிதி மேலாண்மையை திறம்பட திட்டமிடுவதற்கான சில ஆலோசனைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

சொத்துக்கள் மற்றும் சேமிப்புகள்:

தனிநபர் தான் சம்பாதிக்கும் பணத்தை சரியாக நிர்வகிக்க பெரிய நிதி பின்னணி இருக்க வேண்டிய அவசியமில்லை. சற்று அர்ப்பணிப்பு இருந்தால் போதும். உங்கள் மாத வருமானத்தில் கணிசமான பகுதியை சேமிக்க முடிவு செய்வது பண நிர்வாகத்தின் முதல் படியாகும். சிறந்த நிதி சுதந்திரத்திற்கு பணத்தை சேமிப்பது அனைவருக்கும் முக்கியம். எப்பொழுது அவசரச் சூழல் ஏற்பட்டாலும் சில சமயங்களில் கடன் கூட கிடைக்காத நிலை ஏற்படும். அப்போதுதான் பணத்தைச் சேமிக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பணத்தை சேமிப்பது உங்களை கடனில் இருந்து காப்பாற்றும். விரும்பிய சொத்துக்களை வாங்க முடியும் என்பதோடு,  நிதி இலக்குகளை சரியான நேரத்தில் அடையவும் உதவும்.

கடன்கள் மற்றும் பொறுப்புகள்:

ஒவ்வொரு ஆண்டும் வங்கி இருப்பு, முதலீடுகள், வீட்டு மதிப்பு மற்றும் பிற சொத்துக்கள் ஆகியவற்றை கணக்கிட வேண்டும். கார் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு பாக்கிகள் மற்றும் பிற கடன்களின் பட்டியலை உருவாக்குங்கள். இந்த தனிப்பட்ட இருப்புநிலை உங்கள் நிகர மதிப்பு என்ன என்பதைக் காட்டுகிறது. இது முக்கியமாக உங்கள் நிதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பயன்படுகிறது. உங்களிடம் இருக்கும் உபரி பணத்தை எப்படி கையாள்வது என்பது உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும். உங்களிடம் உள்ள பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்யவில்லை என்றால், பணவீக்கத்தால் அதன் மதிப்பு படிப்படியாக குறையலாம். இதன் விளைவாக, உங்கள் எதிர்கால இலக்குகளை அடைய முடியாது. எனவே, எவ்வளவு விரைவில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ அவ்வளவு நல்லது.

பட்ஜெட்:

சம்பளத்தில் வாழ்பவர்களுக்கு வரும் எதிர்பாராத செலவுகள் பெரும் தொந்தரவாக அமையும். எனவே ஒவ்வொருவரும் பட்ஜெட்டைத் தயாரிக்க முயலுங்கள். சரியான பட்ஜெட்டைத் தயாரிக்காமல் உங்கள் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்? அந்த நிதியை எவ்வாறு செலவிடுவது என்பதை இது காட்டுகிறது. அத்தியாவசியப் பொருட்கள், ஆடம்பரங்கள், தவிர்க்கக்கூடியவை என வகைப்படுத்தினால்,  முதலில் எதற்காக செலவழிக்க வேண்டும் என்பதை அறிய இது உதவும்.

வருமான ஆதாரங்கள்:

மாத வருமானத்திற்கு பணியாற்றுபவர்கள் அதை மட்டுமே சார்ந்து இருக்காமல் இரண்டாவது வருமானத்தைத் தேட வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் கூட, ஒரு தொழிலில் முதலீடு செய்வதை விட பல்வேறு வகையான தொழில்களில் முதலீடு செய்வது நல்லது. இது தவிர, மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்தால், சில காலம் கழித்து நிலையான வருமானத்தைப் பெறலாம்.

செலவுகள்:

வருமானத்தின் பெரும்பகுதி வாடகை, கடன் EMI, மளிகைப் பொருட்கள், சந்தாக்கள், வீடு பழுதுபார்ப்பு, பயணம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்காக செலவிடப்பட வேண்டும். செலவுகளை நிர்வகிப்பது என்பது தனிப்பட்ட நிதியின் முக்கிய அம்சமாகும். தனிப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதற்கு வருமானத்தை விட குறைவாக செலவு செய்ய வேண்டும். இல்லையெனில், கடன்கள் அதிகரிக்கும்.

காப்பீடு திட்டம்:

காப்பீடு என்பது விபத்துக்கள் அல்லது நோய் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் சில சேமிப்புகளை ஒதுக்கி வைப்பதாகும். பாதுகாப்புத் திட்டங்களில் காப்பீடு, வருவாயை வழங்கும் அவசரகால நிதிகள், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கக்கூடிய ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

 ஃபிக்ஸட் டெபாசிட்கள்:

சேமிப்பை சும்மா கிடப்பதை விட வளரும் இடத்தில் இருப்பது நல்லது. பணம் வளரும் போது, ​​அது காலப்போக்கில் பணவீக்கத்தை விஞ்சி, வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. முதலீடுகள் பணம் வளரவும் செல்வத்தை உருவாக்கவும் உதவுகின்றன. பங்குகள், பரஸ்பர நிதிகள், பத்திரங்கள், நிலையான வைப்புத்தொகைகள், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் போன்ற பல்வேறு கருவிகளில் முதலீடு செய்வது பணத்தின் மீதான வருமானத்தை ஈட்டலாம் மற்றும் அசல் முதலீட்டுத் தொகையைத் தாண்டி செல்வத்தை அதிகரிக்கலாம். இருப்பினும், முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில அபாயகரமான முதலீடுகள் சில சமயங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget