Mutual Fund Inflows: புதிய உச்சம் தொட்ட ஜூலை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரூ.22 ஆயிரம் கோடியைக் கடந்தது!
ஜூலை மாதத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, ரூ.22,583 கோடியாக அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, ரூ.22,583 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு:
கொரோனா இரண்டாவது அலையில் இருந்து பொருளாதாரம் மெல்ல மெல்ல விடுபட்டு வரும் சூழலில் புதிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் சந்தைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. அதன் விளைவாகக், கடந்த ஜூலை மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் மற்று அது சார்ந்த திட்டங்களில் ரூ.22,583.52 கோடி அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.5,988 கோடி, மே மாதத்தில் ரூ.10,083 கோடி, ஏப்ரலில் ரூ.3,437 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.9,115 கோடி என்றளவில் இருந்தது.
கடந்த 2020 ஜூலை தொடங்கி 2021 பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் மியூச்சுவல் ஃப்ண்டகளில் முதலீட்டைவிட வெளியேறுதலே அதிகமாக இருந்தது. இது பொருளதாரப் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதத்தில் கோல்ட், இடிஎஃப் திட்டங்களில் நிகர முதலீடு ரிட்டர்ன்ஸ் ரூ.360 கோடியாக இருந்தது. அதே அதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் ரூ.360 கோடி என்று இருந்தது.
கடன்சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் ரூ.73,964 கோடி முதலீடு செய்துள்ளனர்.
லிக்விட் ஃபண்ட் நிலை என்ன?
கடந்த ஜூலை மாத நிலவரப்படி லிக்விட் ஃபண்ட் திட்டங்கள் ரூ.31.740 கோடியும், நிதிச் சந்தை ரூ.20,910 கோடியும், குறைந்தகால வரையறை திட்டங்கள் ரூ.8,161 கோடியும், அல்ட்ரா ஷார்ட் ரூ.6,656 கோடியும் ஈர்த்துள்ளன.
இந்த வகையில், ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் நிதித் துறையின் நிகர முதலீடு கடந்த ஜூலையில் ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் மாத இறுதியில் ரூ.33.67 லட்சம் கோடியாக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் சொத்தும் மதிப்பு புதிய உச்சமாக ஜூலையில் ரூ.35.32 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
ஒரு முதலீட்டு நிறுவனம், ஒரே நோக்கம் கொண்ட பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டி, அதனை முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை சேவைக் கட்டணமாக தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்டின் அடிப்படை. தமிழில், இதனை பரஸ்பர நிதி என அழைக்கின்றனர்.
முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைத் திரட்டுகின்ற ஒரு டிரஸ்ட்டாக இது இருக்கிறது. அதன் பின்னர், ஈக்விட்டி, பாண்டுகள், பணச் சந்தை சார்ந்த பத்திரங்கள் மற்றும்/அல்லது பிற செக்யூரிட்டிகளில் அந்த நிதியானது முதலீடு செய்யப்படும். ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் யூனிட்கள் வழங்கப்படும். யூனிட் என்பது ஹோல்டிங் நிதியின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. இந்தக் கூட்டு முதலீட்டின் மூலம் உருவாக்கப்படும் வருமானம்/லாபங்கள், ஒரு திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு அல்லது NAV -ஐ கணக்கிடுவதன் மூலம் சில குறிப்பிட்ட செலவுகளைக் கழித்த பின்னர் முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார முறையில் பகிர்ந்து கொடுக்கப்படும்.
மியூச்சுவல் ஃப்ண்ட முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால் முதலீட்டாளர்கள் ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம்.