Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
karthigai deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் மாயா போனை கார்த்திக் எடுத்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. தி
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷை துணிக்கடைக்கு அழைத்து சென்று மாயாவை திசை திருப்பி, கார்த்திக் திட்டத்தின்படி அவளது போன் தூக்கப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக்கிடம் மாயா போன்:
அதாவது, துணி எடுத்து கொண்டு வீட்டிற்கு வரும் மகேஷ் மாயா, மாயா என்று கூப்பிட மாயா இல்லை என்பது தெரிய வருகிறது. உடனே அவளுக்கு விடாமல் போன் செய்ய மாயா போன் கார்த்தியிடம் இருக்கிறது.
கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்:
அடுத்ததாக கார்த்திக் போனை எடுத்து என்ன மகேஷ் மாயாவை தேடுறியா? அவங்களை நான் தான் கடத்தி வச்சிருக்கேன், ஒழுங்கு மரியாதையா ரேவதி கிட்ட போய் உனக்கும் மாயாவுக்கும் இருக்கும் தொடர்பை பத்தி சொல்லு, இல்லனா மாயாவை கொன்னுடுவேன் என்று மிரட்ட மகேஷ் அதிர்ச்சி அடைகிறான்.
இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் மெஹந்தி போட தயாராக மகேஷ் பதறியடித்து ஓடி வந்து ரேவதியை விசாரிக்க மேலே இருப்பதாக தெரிந்து அங்கு வருகிறான், மறுபக்கம் மாயா சாமுண்டீஸ்வரியை கோவிலில் சந்தித்து எதற்காக வர சொல்லி இருந்தீங்க என்று கேட்க நான் வர சொல்லலையே என்று சொல்கிறாள்.
ட்விஸ்ட் தரும் மாயா:
இங்கே மகேஷ் ரேவதியை தனியாக அழைத்து சென்று நான் உன்னை உண்மையா லவ் பண்ணல.. அண்ணி சொல்லி தான் என்று சொல்ல ரேவதி என்ன உளறிட்டு இருக்க என்று கேட்கிறாள். மகேஷ் எனக்கும் அண்ணிக்கும் என்று தொடர்பை பற்றி சொல்ல வர சரியான சமயத்தில் உள்ளே நுழையும் மாயா உண்மையை சொல்ல விடாமல் தடுத்து சமாளித்து விடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

