Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch video: பாலிவுட் பிரபல நடிகை பூனம் பாண்டேவிற்கு சாலையில் வைத்து முத்தம் கொடுக்க ரசிகர் முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகின் முக்கியமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி விடுபவர்.
பூனம் பாண்டே:
பூனம் பாண்டேவை பொதுெளியில் பார்த்தால் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் சிலர் விரும்புவது வழக்கம். இதுபோன்று மும்பையில் சாலையின் ஓரத்தில் பூனம் பாண்டே சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் போட்டோவிற்கு போஸ் கொடுத்து நின்றிருந்தபோது, அவரது பக்கத்தில் ஒரு இளைஞர் வந்தார்.
முத்தம் கொடுக்க முயற்சித்த ரசிகர்:
அவர் பூனம் பாண்டேவுடன் இணைந்து ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்க பூனம் பாண்டேவும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், அந்த இளைஞர் பூனம் பாண்டேவுைன் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்க முயற்சித்தார்.
WTH happened here? #PoonamPandey pic.twitter.com/GmRX9sI87b
— BollyHungama (@Bollyhungama) February 21, 2025
இதனால், அதிர்ச்சி அடைந்த பூனம் பாண்டே அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து அச்சத்தில் ஓடினார். அப்போது, அங்கே இருந்த ஒரு பெண்ணும், இளைஞர் ஒருவரும் வந்து அந்த இளைஞரை எச்சரித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்ச்சைகளின் நாயகி:
பூனம் பாண்டே கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையின்போது இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால் தான் நிர்வாணமாக ஓடுவேன் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்பும், அவ்வப்போது இதுபோன்று சர்ச்சையில் சிக்கி வந்த பூனம் பாண்டே, ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்த்ரா தனது நிறுவனத்தின் மூலம் ஆபாச படம் எடுப்பதாக எழுந்த விவகாரத்திலும் சிக்கினார்.
33 வயதான பூனம் பாண்டே 2013ம் ஆண்டு நஷா என்ற இந்திப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன்பினபு, போஜ்பூரி, தெலுங்கு படங்களில் நடித்தார். தெலுங்கில் மாலினி அண்ட் கோ என்ற படம் மூலமாக தென்னிந்திய திரையுலகில் நுழைந்தார். ஆனாலும் இந்தி படங்களிலே தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக டச் தி ஃபயர் என்ற இந்தி படத்தில் நடித்தார். இதுபோன்று இந்தி ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
மேலும் படிக்க: டிராகன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒரே ஆளுங்களா...வெளியான உண்மை
மேலும் படிக்க: இதுக்கெல்லாமா கண் கலங்குறது...குட் பேட் அக்லி இயக்குநர் செஞ்ச வேலைய பாருங்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

