Union Budget 2025: மத்திய பட்ஜெட்டா? இல்ல பீகாருக்கான பட்ஜெட்டா? - குவிந்த திட்டங்கள், மழையாய் பொழிந்த நிதி
Budget 2025 Announcements For Bihar: மத்திய அரசின் பட்ஜெட்டில் பீகாருக்கு அதிகப்படியான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Budget 2025 Announcements For Bihar: மத்திய அரசின் பட்ஜெட்டில் பீகாருக்கு அதிகப்படியான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
மத்திய அரசு பட்ஜெட்:
2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பெரும்பாலான நலத்திட்டங்கள் பீகாருக்கே ஒதுக்கப்பட்டு இருந்தன. இதனால், இது மத்திய அரசு பட்ஜெட்டா? அல்லது பீகாருக்கான பட்ஜெட்டா? என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். பீகாரில் நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேநேரம், மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக, மத்திய மற்றும் மாநிலங்களில் ஆட்சியை காப்பாற்றுவதற்காக, பீகாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பீகாருக்கான திட்டங்கள்:
1. பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவுவோம், இது கிழக்கு இந்தியாவில் உணவு பதப்படுத்துதலை ஊக்குவிக்கும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
2. தாமரை விதைகள் உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பீகாரில் சோளம் வாரியம் நிறுவப்படும்.
3. ஐஐடி பாட்னா விரிவாக்கம் செய்யப்படும்
4. மாநிலத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பீகாரில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் எளிதாக்கப்படும் மற்றும் பாட்னா விமான நிலையத்தின் திறன் விரிவாக்கப்படும்
5. மேற்கு கோசி கால்வாய் ERM திட்டம்: பீகாரின் மிதிலாஞ்சல் பகுதியில் நிதி உதவி வழங்கப்படும்
6. புத்தரின் வாழ்க்கை மற்றும் காலங்கள் தொடர்பான இடங்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.