மேலும் அறிய

Exclusive Cars: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 பிரத்யேக கார்கள் - ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம் - விவரங்கள் உள்ளே..!

Exclusive Cars In India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது கிடைக்கும் பிரத்தியேக கார்களின் விவரங்கள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Exclusive Cars In India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது கிடைக்கும், டாப் 5 பிரத்தியேக கார்களின் விவரங்கள் கிழே விவரிக்கப்பட்டுள்ளன. 

பிரத்தியேக கார்கள்:

பிரத்தியேக கார்கள் எப்பொதுமே தனித்துவம் வாய்ந்தவை ஆகும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார்கள் உற்பத்தி செய்யப்படும். அதேநேரம், மற்ற கார்களில் இருந்து மாறுபடும் வகையில், தனித்துவமான அம்சங்கள், வடிவமைப்புகளை கொண்டிருக்கும். வழக்கமான கார்களை விட இதன் விலையும் அதிகமாக இருக்கும். ஆனாலும், இத்தகைய கார்களை பயன்படுத்துவதை பெரும் பணக்காரர்கள், சினிமா மற்றும் விளையாட்டு விரர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது கிடைக்கும், டாப் 5 பிரத்தியேக கார்களின் விவரங்கள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன.

போர்ஷே 911 S/T:

Porsche 911 S/T ஒரு பிரத்யேக சூப்பர் கார் ஆகும். இது இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் 911 ஸ்டேபிலுக்கு மேலே நிலைநிறுத்தப்பட்டு, அதன் விலை ரூ.4.26 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Porsche 911 S/T மாடலானது  911 கார் சீரிஸின் 60 ஆண்டுகால வரலாற்றிற்கு மரியாதை செலுத்துகிறது. இது 518 பிஎச்பி மற்றும் 465 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 4.0லிட்டர் 6 சிலிண்டர்களுடன் கூடிய பாக்ஸர் இன்ஜினை கொண்டுள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது

Mercedes-AMG G63 AMS கிராண்ட் எடிஷன்:

Mercedes-AMG G63 ஒரு அரிய SUV ஆகும். இது வெறும் 1000 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. மொத்த உற்பத்தியில் 25 யூனிட்கள் மட்டுமே இந்திய சந்தைக்கு ஒதுக்கப்பட்டன. நிறுவனம் இந்த காரை இந்திய சந்தையில் ரூ. 4 கோடி விலையில் அறிமுகப்படுத்திய, 7 நிமிடங்களிலேயே மொத்த யூனிட்களும் விற்றுத் தீர்ந்தன. இந்த SUV ஆனது 577 bhp மற்றும் 850 Nm டார்க்கை வெளிப்படுத்தும் 4.0லிட்டர்  V8 கையால் கட்டப்பட்ட AMG இன்ஜினைக் கொண்டுள்ளது.

லம்போர்கினி ரெவல்டோ

லம்போர்கினி ரெவல்டோ அவென்டடோரின் வாரிசு மற்றும் நிறுவனத்தின் புதிய முதன்மை கார் மாடலாகும். இதுவே நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஹைப்பர் கார் ஆகவும் உள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை இந்திய சந்தையில் ரூ.8.89 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர் கார் 2026 ஆம் ஆண்டு வரை இந்திய சந்தையில் விற்று தீர்க்கப்பட்டுள்ளது. இது 6.5லிட்டர் வி12 இன்ஜின் மற்றும் 1,015 பிஎச்பி மற்றும் 807 என்எம் முறுக்குவிசை உற்பத்தி செய்ய இணைந்து செயல்படும் மூன்று மின்சார மோட்டார்கள் கொண்ட ஹைப்ரிட் பவர்டிரெய்னைக் கொண்டுள்ளது.

லோட்டஸ் எலெட்ரே:

லோட்டஸ் எலெட்ரே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிறுவனத்தின் முதல் கார் ஆகும். Eletre என்பது ஒரு மின்சார SUV, இது சீனாவிற்கு சொந்தமான பிரிட்டிஷ் கார் தயாரிப்பாளரிடம் இருந்து வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.55 முதல் 2.99 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லோட்டஸ் எலெட்ரே அதிகபட்சமாக 905 பிஎச்பி பவர் மற்றும் 985 என்எம் டார்க்கை வழங்குகிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் அபூர்வத்தன்மையும் புதுமையும் தெருக்களில் அதை மிகவும் பிரத்தியேகமாக்குகிறது.

ஃபெராரி SF90 ஸ்ட்ரேடல்:

ஃபெராரி SF90 Stradale, இந்திய சந்தையில் கிடைக்கும் ஃபெராரியின் முன்னணி கார் மாடலாக உள்ளது. இதன் விலை ரூ.7.50 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முதன்மையான ஃபெராரி 4.0லி ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் வருகிறது. இது 3 மின்சார மோட்டார்களுடன் இணைந்து செயல்படுகிறது. இன்ஜின் 769 பிஎச்பி பவரையும், எலக்ட்ரிக் மோட்டார்கள் 217 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். இது மொத்தம் 986 பிஎச்பி பவர் மற்றும் 800 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Embed widget