மேலும் அறிய

Today Rasipalan, December 15: கடகத்துக்கு பொறுமை.. கும்பத்துக்கு கவனம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan: டிசம்பர் 15ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 15.12.2023 -  வெள்ளி கிழமை

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

பகல் 1.45 மணி முதல் பகல் 2.45 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மீதான வதந்திகள் நீங்கும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகள் குறையும். சோர்வு விலகும் நாள்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

மிதுனம்

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புரிதல் உண்டாகும். சிறு தூரப் பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

கடகம்

சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். எதிர் பாலின மக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவீர்கள். உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். புதிய வீடு வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். கலை துறைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் அனுபவம் வெளிப்படும். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

கன்னி

உடன்பிறந்தவர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உயர் கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உற்சாகம் நிறைந்த நாள்.

துலாம்

எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தெளிவு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் நுட்பங்களை அறிவீர்கள். மறதி குறையும் நாள்.

தனுசு

உயர்பதவியில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்படவும். வெளியூர் பயணம் மூலம் அனுபவம் கிடைக்கும். கடன் விஷயத்தில் பொறுமை வேண்டும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி உண்டாகும். வியாபாரப் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். அசதிகள் விலகும் நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே உள்ள மனஸ்தாபம் நீங்கும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு மேம்படும். பழைய நினைவுகளினால் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். திடீர் செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். கனிவு வேண்டிய நாள்.

கும்பம்

சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். மனதளவில் உள்ள கவலைகள் விலகும். இறை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.  

மீனம்

பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு மேம்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வான சூழல் அமையும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும்.கௌரவ பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  வெற்றி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget