Vijay TVK Manaadu | மாநாடு-க்கு திணறும் விஜய்..போலீஸ் கேட்ட 21 கேள்விகள்..அனுமதி இல்லையா?
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைப்பெற உள்ளது, இந்த மாநாட்டிற்கு அனுமதிக்காக காவல்துறையின் சார்பில் 21 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கான பதில்களை தமிழக வெற்றிக்கழகம் தற்போது அளித்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாநாட்டுக்கு அனுமதி கேட்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் அனுமதி கடித்தத்தை தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த 28ஆம் தேதி கொடுத்திருந்தார்.
மேலும் காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக்கழகத்துக்கு 21 கேள்விகள் கொண்ட விளக்க கடித்தத்தை சம்ர்பிக்குமாறு காவல்துறையினர் கடிதம் வழங்கியிருந்தனர். இந்த கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு காவல்துறை கெடுவிதித்திருந்தது.
இந்த நிலையில் தவெக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் எழுத்து வடிவில் 21 கேள்விகளுக்கான பதிலையும் அளித்துள்ளார்.
அதில் மாநாட்டுக்கு எத்தனை நபர்கள் வருவார்கள் என்ற கேள்விக்க சுமார் 50000 ஆயிரம் தொண்டர்கள் தமிழ்நாடு ஆந்திர மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் குழந்தைகள் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் 85 ஏக்கர் இடத்தின் உரிமையாளரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாநாடு எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை முடியும் என்ற கேள்விக்கு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைப்பெறும் என்றும் பெண்கள் முதியவர்களுக்கு தனித்தனியாக இருக்கைகள் போடப்பட்டு பாதுக்காப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. மாநாட்டின் தொடக்கத்தில் விஜய் பெரிய கொடி கம்பத்தில் கொடி ஏற்றவுள்ளதாக கூறப்பட்டுள்ளது
மாநாட்டில் எந்த பிரபலங்கள் பங்கேற்கிறார்கள் என்ற கேள்விக்கு விஜய் தலைமையில் தான் மாநாடு நடைப்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் எத்தனை பேனர்க்ள் வைக்கப்படும் என்ற கேள்விக்கு 70-க்கும் மேற்ப்பட்ட பேனர்கள் வைக்கப்படும்.
மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வாகன நிறுத்துமிடங்களில் தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் வரும் மாநாட்டு வருபவர்களுக்கு தேவையான குடிநீர் பாட்டில்கள் வழங்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு வருபவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு செய்யப்பட்டு அது பார்சல்களில் வழங்கப்படும் என்றும் தீயணைப்பு, மீட்புப் பணிகளுக்கான வாகனங்கள் உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதி ஏற்பாடு செய்ய சுகாதாரத்துறையிடம் மனுகொடுக்கப்பட்டுள்ளதாக தவெக சார்பில் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டிற்காக உள்ளே வந்து செல்ல 14 வழிகளில் அமைக்கப்படும் என்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு 4 தனி வழிகள் அமைக்கப்படும், வாகனங்கள் வந்து செல்ல 4 முதல் 6 வரை வழிகள் அமைக்கப்படும் என்றும் மாநாட்டிற்கான மின்சாரம் ஜென்ரேட்டர் மூலம் வழங்கப்படும் என்று தவெக சார்பில் வழங்கப்பட்டுள்ள பதிலில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் துறையினர் இந்த 21 விளக்கங்களை பரிசீலனை செய்த பின்னரே மாநாட்டிற்கான அனுமதி கொடுப்பதா ? இல்லையா ? என்பது தெரிவரும் என டி எஸ் பி சுரேஷ் கூறியுள்ளார்.