Karthigai Deepam: புருஷனுக்கு லவ் லெட்டர் எழுதிய ரேவதி.. கடைசியிலே இப்படி போச்சே - கார்த்திகை தீபத்தில் இன்று
தனது கணவன் கார்த்திக்கிற்கு ரேவதி காதல் கடிதம் எழுதி சர்ப்ரைஸ் அளிக்க முயற்சித்த நிலையில், அடுத்து என்ன நடந்தது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி கார்த்தியின் பிறந்தநாளை கொண்டாட தயாராகிறாள். இந்த நிலையில், இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
லவ் லெட்டர் எழுதிய ரேவதி:
அதாவது, ரேவதி கார்த்திக்காக ஒரு லவ் லெட்டரை எழுதி அதை கார்த்தியின் சட்டை பாக்கெட்டில் வைத்து விடுகிறாள். இதனை தொடர்ந்து மேலும் அவள் கார்த்தியின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்து சர்ப்ரைஸ் கொடுக்கிறாள்.
எல்லாரும் இதை பார்த்து சந்தோசப்பட சந்திரகலா மட்டும் விருப்பமின்று நிற்கிறாள். பிறகு கார்த்தி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுகிறான். ரேவதி சந்தோஷமடைகிறாள். அவன் பேக்கெட்டில் இருக்கும் லவ் லெட்டரை படிப்பானா? இல்லையா? என்ற பில்டப் காட்சிகள் எகிறுகிறது.
மளிகை சாமானாக மாறிய காதல் கடிதம்:
இதனை தொடர்ந்து ரேவதி மயில்வாகனத்திடம் லிஸ்ட் ஒன்றை கொடுத்து சில பொருட்களை வாங்கி வர சொல்கிறாள். அடுத்து சிவனாண்டி சந்திரகலாவுக்கு போன் செய்து கார்த்திக்கு ஏற்கனவே கல்யாணமாகி இருக்கு, தீபா என்பது தான் அவளுடைய பெயர் என்ற உண்மையையே உடைக்கிறான்.
இதனையடுத்து சந்திரகலா துர்காவின் நிச்சயம் அன்று உண்மையை உடைக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். அடுத்து மயில் வாகனம் ரேவதி கொடுத்த லிஸ்டை எடுக்க கார்த்திக் அதை வாங்க முயற்சி செய்ய இருவருக்கும் இடையே நடந்த குழப்பங்களால் லிஸ்ட் இடம் மாறுகிறது. கார்த்திக் அந்த லெட்டரை எடுத்து படிக்க அது மளிகை சமானாக லிஸ்ட்டாக இருக்கிறது.
அடுத்து மயில்வாகனம் கடைக்கு வந்து லெட்டரை கொடுக்க கடைக்காரர் அதை படிக்க பிறகு கோபமடைகிறார். இந்த களேபரமான சூழலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.



















