மேலும் அறிய

நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கியது எப்படி?.. இது விடுதலை உத்தரவா?.. உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடக நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது ரசிகர் ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுதொடர்பான செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து தர்ஷனுடன் சேர்த்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, நடிகர் தர்ஷனும் அவருடன் கைது செய்யப்பட்ட சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பானது. குற்றவாளிக்கு சொகுசு வாழ்க்கையா என்றும் விமர்சனங்கள் எழுந்தன. 

கைது செய்யப்பட்ட 17 பேரில் பத்து பேருக்கு ஜாமீன் கிடைத்தது. நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட ஏழு பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு தொடர்பாக நீதிபதிகள் மகேந்திரன், பர்வதிவாலா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நீதிபதிகள் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு மீது அதிருப்தியடைந்துள்ளனர். 

ரேணுகாசாமியை கொலை செய்ய காரணம் என்ன, தர்ஷன் - பவித்ரா கவுடாவுக்கு இடையே என்ன உறவு என்பது குறித்தும் நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜாமீன் உத்தரவு விபரீதமானது. தரவுகளை படித்து பார்த்தால் கொலை வழக்கில் இருந்தே விடுதலை செய்வதற்கான உத்தரவு போல் உள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மேலும், ஒருவரின் வாக்குமூலம் பெற 7 நாட்களாகி உள்ள நிலையில், மற்றவர்களின் வாக்குமூலம் வாங்க 20 நாட்களாகி உள்ளதற்கு காரணம் என்ன.

நேரில் கண்ட இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் ஒத்துப்போகும் வகையில், அரசிடம் ஆதாரங்கள் உள்ளதா. குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது.  மூன்று பக்கங்களுக்குள் எழுத்துபூர்வமான உங்களின் வாதத்தை, ஒரு வாரத்திற்குள், சமர்ப்பிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் செய்த அதே தவறை, நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் தண்டிக்கவும் மாட்டோம், விடுதலை செய்யவும் மாட்டோம் என இவ்வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Embed widget