(Source: Poll of Polls)
வீடுதேடி வரும் அதிர்ஷ்டம்; உங்கள் வீட்டுத் தோட்ட கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
கத்தரி, வெண்டை, சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், தக்காளி போன்றவற்றை பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் பயன்பெற Android மொபைல்களில் "உழவன் செயலி " மூலமாகவும் பதிவு செய்து பயன் பெறலாம்.

வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26-ஆம் நிதியாண்டில் வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும், தோட்டங்களில் காய்கறி செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக விதைதொகுப்பு வழங்கப்படுகிறது.
இலவசமாக வழங்கப்படும் காய்கறி விதைத்தொகுப்பு - எப்படி பெறுவது ?
வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26-ஆம் நிதியாண்டில் மக்களின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கியுள்ளார்.
இத்திட்டத்தில் மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாகவும், தோட்டங்களில் காய்கறி செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் அடங்கிய 15 லட்சம் காய்கறி விதை தொகுப்பு; பப்பாளி, கொய்யா, எலுமிச்சை அடங்கிய 9 லட்சம் பழச்செடிகள் தொகுப்பு; புரதச்சத்து நிறைந்த துவரை, காராமணி அடங்கிய 1 லட்சம் பருப்பு வகை தொகுப்பை, பொதுமக்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
விதைகளை எங்கு வாங்கலாம்?
வீட்டு தோட்டம் வளர்ப்பதற்கு ஆசைப்படும் நபர்கள், விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலைத் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, அங்க தரப்படும் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் :
எந்த நிலத்தில் பயிர் செய்யப் போகிறீர்களோ அதற்கான சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்றவை எடுத்த செல்ல வேண்டும். நேரில் செல்ல முடியாது நபர்கள், https:tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிக ஏக்கரில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், கத்தரி, வெண்டை, சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், தக்காளி போன்றவற்றை பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் பயன்பெற Android மொபைல்களில் "உழவன் செயலி " மூலமாகவும் பதிவு செய்து பயன் பெறலாம் எனத் தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்தார்.
புதுச்சேரி : காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு ஆடிபருவத்தில் இலவசம்
இதேபோல், புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை தோட்டக்கலை பிரிவின் மூலம் புதுச்சேரி பகுதியில் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவு, உற்பத்தி திறன் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பகுதியில் நகர, கிராமப்புற மக்களுக்கு தேவையான பசுமையான, தரமான காய்கறிகளை அவர்களே சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க 200 ரூபாய் மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு ஆடிபருவத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றது.





















