மேலும் அறிய

Duraimurugan vs Rajinikanth : வீட்டுக்கே வந்த துரைமுருகன்! சமாதானப்படுத்திய ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அவரை வீட்டில் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் ரஜினி விவகாரத்தில் தன்னுடைய மனம் வருத்தம் அடைந்து விட்டதாக ஸ்டாலின் இடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது... இந்நிலையில் அமைச்சர் துரைமுருகனை சமாதானம் செய்து வைத்து விட்டு ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன..

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்காக நேற்றைய தினம் சென்னை விமான நிலையம் வந்தபோது ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களுமே அவரை வழியனுப்ப வருகை தந்திருந்தனர்.

குறிப்பாக மூத்த அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகனை தொலைபேசியில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் திட்டியதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், விமான நிலையத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை வழி அனுப்பி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமைச்சர் துறைமுருகன்.

ஆனால் இந்த நிகழ்வுக்கு முன்பு தனியாக முதல்வரை அவருடைய இல்லத்தில் சந்தித்த துரைமுருகன் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்மையில் அமைச்சர் ஏவா வேலுவின் கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில், ஓல்ட் ஸ்டுடென்ட் என்று துரைமுருகனை கிண்டலாக ரஜினி பேசியதை அவர் ரசிக்கவில்லை. அதற்கு பல்லு போன நடிகர் எல்லாம் என்று காட்டமாக விமர்சனத்தையும் முன் வைத்திருந்தார் துரைமுருகன்.

இது திமுகவுக்குள்ளும் வெளியேவும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்த, கடுப்பான முதல்வர் ஸ்டாலின் நேரடியாக துரைமுருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லப்படுகிறது. அதில் நம்முடைய நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஒருவரை இப்படித்தான் அவமரியாதை செய்து பேசுவதா? என்று கோபமாக ஸ்டாலின் பேசியதாகவும், அதற்கு துரைமுருகன் அளிக்க வந்த விளக்கத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் பரவின. மேலும் நீங்கள் பேசியது தவறு ரஜினியிடம் வருத்தம் தெரிவியுங்கள் என்று முதல்வர் தரப்பிலிருந்து அழுத்தம் வர, நகைச்சுவையை பகைச்சுவை ஆக்க வேண்டாம் என்று முற்றுப்புள்ளி வைத்தார் துரைமுருகன். 

ஆனால் இந்த விவகாரத்தில் முதல்வர் மீது துரைமுருகனுக்கு சிலர் வருத்தங்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது, முதலாவது ரஜினிகாந்துக்கு ஆதரவாக முதல்வர் நம்மிடம் இப்படி பேசிவிட்டாரே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் துரைமுருகன். மேலும் விழா மேடையில் தனக்கு இருக்கை ஒதுக்காமல் கீழே அமர வைத்ததையும் துரைமுருகன் விரும்பவில்லை. 

இதனால் விமான நிலையத்திற்கு வந்து வழி அனுப்பாமல், முதல்வரை வீட்டிலேயே சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு திரும்பி விடலாம் என்று முதலில் துரைமுருகன் நினைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக முதல்வரை அவருடைய வீட்டில் சந்தித்த துரைமுருகன், ரஜினிகாந்த் விவகாரத்திற்கு முதல் வருடம் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை வருத்தப்படுத்திய சில விவரங்களையும் அவர் முதல்வரிடம் மனம் விட்டு பேசியதாக தகவல்கள் சொல்கின்றன.

குறிப்பாக இளைஞர்களுக்கு வழி விட தான் எப்போதுமே தயார் என்றும், ஆனால் கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் இது குறித்து பேசும்போது, அதை முதல்வரும் ரசித்தது தனது மனதை புண்ணாக்கிவிட்டது என்று துரைமுருகன் ஸ்டாலினிடம் தெரிவித்ததாக தகவல்கள் சொல்கின்றன. அதன் பிறகு இது குறித்து ஸ்டாலினும் மூத்த அமைச்சரான துரைமுருகனை சமாதானம் செய்யும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

அதன் பின்னரே விமான நிலையம் வரை வந்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பும் வரை எந்த புதிய சர்ச்சைகளையும் உருவாக்காமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யுமாறு அமைச்சர்கள் அனைவருக்கும் ஸ்டாலின் அறிவுறுத்திவிட்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget