DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் 58 பேர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அடைத்து விற்பனை செய்த நபர்களை திமுக MLA நேரடியாக சென்று ஆய்வு நடத்தி காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியி விஷச்சாராயம் அருந்தியதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். இந்த சம்பவம் தொடர்பாக 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறது இந்நிலையில், மெத்தனால் கடத்தி சென்ற புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தனது தொகுதி முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் தான் வேல்ராம்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் பள்ளிக்கு எதிரே மளிகை கடையில் கள்ளச்சாராயம் விற்கும் வீடியோ அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினரோடு சென்ற சட்டமன்ற உறுப்பினர் சம்பத் முதலியார்பேட்டை சாலைப்பணிகளை ஆய்வு செய்வதாகக் சொல்லிவிட்டு, போலீசாருடன் வேலாரம்பட்டு ஏரிக்கு செல்லும் மாரியம்மன் கோயில் தெருவுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே ஒரு வீட்டையொட்டிய பகுதியில் மூட்டையில் கள்ளச்சாராயப் பாக்கெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பல நாட்களாக இது நடந்துவருவதும், சாராயம் அருந்த இடம் இருப்பதையும் கண்டு அதிர்ந்துள்ளனர். மேலும் அருகில் இருந்த மளிக்கைக்கடையில் பாட்டிலில் சாராயம் இருந்துள்ளது, மற்றொரு வீட்டில் பாக்கெட்டுகளில் சாராயம் இருந்துள்ளது. மேலும் கடைக்கு வெளியே இருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கைப் பகுதியை தூக்கி பார்த்தால் அங்கும் சாராய பாட்டில்கள் இருந்தன. இப்படி எல்லா இடத்திலும் சாராய மயமாக இருக்க, அனைத்தையும் ஆய்வு செய்து, கையும் களவுமாக பிடித்த MLA சம்பத் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து சுமார் 50,000 மதிப்புள்ள கள்ளச்சாராய பாக்கெட் மற்றும் பாட்டில்களை பட்டபகலில் போலீசார் பறிமுதல் செய்ய பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.