MK Stalin | 40 ஜெயிச்சா போதுமா? ஓட்டு வங்கியில் ஓட்டை!கலக்கத்தில் உ.பிக்கள்!
40 தொகுதியிலும் வெற்றி என்று வெளியே மார் தட்டிக்கொண்டாலும், கடந்த தேர்தலை விட 6 சதவீததிற்கும் அதிகமான வாக்குகள் திமுகவிற்கு குறைந்துள்ளது ஸ்டாலினை கலக்கமடைய செய்துள்ளது..
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் ஒரே கூட்டணி கைப்பற்றிய மாநிலம் தமிழ்நாடு தான். 2019 தேர்தலிலிருந்தே தங்களூடைய வெற்றி கூட்டணியை அப்டியே உடையாமல் பாதுகாத்து வரும் ஸ்டாலின், இந்த முறையும் வெற்றி குறித்து உறுதியாகவே இருந்தார். ரிசல்ட்டும் அப்படி தான் வந்தது. ஆனால் கடந்த 2019 தேர்தலை காட்டிலும் இந்த முறை திமுகவின் வாக்குவங்கி சற்றே சரிந்துள்ளதை கண்கூடாக காண முடிகிறது.
கடந்த 2019 தேர்தலில், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என பலமான கூட்டணியை எதிர்கொண்டது திமுக. 20 தொகுதிகளில் நேரடியாகவும், 4 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலும் என மொத்தம் 24 தொகுதிகளில் களமிறங்கிய திமுக 33.52 சதவீதம் வாக்குகளை பெற்றது.
ஆனால் இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அப்டியே இருக்கிறது, அதிமுகவோ சிதறிப்போயுள்ளது. கூட்டணியில் பாமக, பாஜக போன்ற பெரிய கட்சிகள் ஏதுமின்றி, தேமுதிக என்ற ஒற்றை கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அப்படி இருக்கையில் இந்த தேர்தலில் 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியும், 1 தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் என 22 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக பெற்றுள்ள வாக்குகள் 26.93 சதவீதம் மட்டுமே.
கிட்ட தட்ட 6.59 சதவீதம் வாக்குகளை இழந்துள்ளது திமுக. சொல்லப்போனால் மிகவும் டஃப் ஃபைட்டு நடைப்பெற்ற விருதுநகர் தொகுதியில், அமைச்சர் KKSSRன் சொந்த தொகுதியான அருப்புக்கோட்டையில் 12,278 வாக்குகளை குறைவாக திமுக பெற்றுள்ளது, ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல தொகுதிகளில் இதே போன்ற நிலை நீடித்துள்ளது.
ஒரு வேலை எதிரணியில் கூட்டணி சிதறி, அதிமுக, பாஜக, பாமக சிதறாமல் இருந்து இருந்தால், திமுகவின் இந்த வெற்றி சாத்தியமா என்ற கேள்வியே இதன் மூலம் எழுந்துள்ளது.
அதே நேரம் அதிமுகவோ கடந்த 2019 தேர்தலில் 19.39 சதவீதம் வாக்குகளை பெற்ற நிலையில், இந்த தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவு கூட்டணி எதுவும் அமையாமலேயே 20.46 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. கிட்டதட்ட 1 சதவீதம் அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
ஆனால் ஒட்டுமொத்ததில் சீமானின் நாம் தமிழர் கட்சியும், பாஜக-பாமக கூட்டணியும் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் வாக்குகளையும் பதம் பார்த்துள்ளார்கள் என்பது தான் உண்மை.
இந்நிலையில் பல்வேறு ரிப்போர்ட்டுகள் ஸ்டாலினின் மேஜைக்கு வந்துக்கொண்டே இருக்க, அடுத்த தேர்தலிலும் இதே நிலை நீடித்தால், சட்டமன்ற தேர்தலில் நெருக்கடி உண்டாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் சில அதிரடி முடிவுகளும், அதற்கான ஆர்டர்களையும் பறக்க விட ஸ்டாலின் ரெடியாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.