மிரட்ட ஆரம்பித்த பிரேமலதா! குழம்பி நிற்கும் EPS! தேமுதிகவினர் கொடுத்த ஐடியா
தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்குகிறோம் என்று இபிஎஸ் கொடுத்த கடிதத்தை அரசியல் நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறேன் என பிரேமலதா சொன்னதன் பின்னணின் பக்கா ப்ளான் இருப்பதாக சொல்கின்றனர்.
மாநிலங்களவை சீட்டை வைத்து அதிமுக தேமுதிக கூட்டணியில் விரிசல் விட ஆரம்பித்தது. மக்களவை தேர்தலின் போதே மாநிலங்களவை சீட் தருவதாக இபிஎஸ் வாக்கு கொடுத்ததாக பிரேமலதா தொடர்ந்து வந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த இபிஎஸ், இறுதியில் அந்த சீட்டை அதிமுகவுக்கே எடுத்துக் கொண்டார். அடுத்த மாநிலங்களவை தேர்தலுக்கு தேமுதிகவுக்கு சீட் தருவதாக அதிமுக தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதனை நம்புவதற்கு தேமுதிகவினர் தயாராக இல்லை என சொல்கின்றனர். இபிஎஸ் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக தேமுதிகவினர் புலம்பி வருகின்றனர். அதனால் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பிரேமலதாவும் பிடிகொடுக்காமல் இருக்கிறார். திமுக, தவெக கட்சிகளுக்கு தேமுதிக தூது அனுப்பி வருவதாக சொல்கின்றனர்.
பிரேமலதா ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் நிலையில் கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளே நெருக்க ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தவெகவுடன் கூட்டணி வைப்பதையே அவர்கள் விரும்புவதாக தெரிகிறது. விஜய் மற்றும் விஜயகாந்த் செண்டிமெண்டை வைத்து நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று யோசனை சொல்லியுள்ளனர். அதேபோல் புதிய கட்சி என்பதால் அதிக தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கலாம் என்ற ப்ளானும் இருக்கிறது.
திமுக கூட்டணிக்கு சென்றால் நிச்சயம் எம்.எல்.ஏக்களை அனுப்ப முடியும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்காது என்பதால் அதிமுகவுடன் அதனை எப்படி கேட்டு வாங்கலாம் என பிரேமலதா காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. கடைசியாக மிரட்டலை கையிலெடுத்துள்ளார் பிரேமலதா. தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்குகிறோம் என்று இபிஎஸ் கொடுத்த கடிதத்தை அரசியல் நாகரிகம் கருதி வெளியிடாமல் இருக்கிறேன் என pressmeetலேயே வைத்து சொல்லிவிட்டார். இதனை காரணமாக வைத்து அதிக இடம் கேட்டு இபிஎஸ்-க்கு தேமுதிக நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதால் இபிஎஸ் அதிக இடங்களை கொடுக்க தயக்கம் காட்டுவதாக சொல்கின்றனர்.





















