சிங்காரச் சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன்! கட்டிட கட்டுமான கண்காட்சி! 60 அரங்குகளுடன் அசத்தல்
சிங்காரச் சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் Smart OMart Living Expo - 2025 கண்காட்சியை அமைச்சர் தாமோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.
சென்னை பல்லாவரத்தில் 60 அரங்குகளுடன் Smart OMart Living Expo - 2025 எனும் கட்டிட கட்டுமான கண்காட்சி இன்று தொடங்கி நாளை வரை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிங்கார சென்னை பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஹனீபா பேசுகையில், " சிங்காரச் சென்னை பில்டர்ஸ் அசோசியேசன் கடந்த 2000 ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 25வது ஆண்டு விழாவையொட்டி சென்னை பல்லாவரத்தில் உள்ள அருள்முருகன் மஹாலில் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு கட்டிட கண்காட்சியானது நடைபெறுகிறது. இந்த கட்டிட கண்காட்சியில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடவும், சந்தேகங்கள் தொடர்பான பல்வேறு விளக்கங்களை பெறவும் ஏதுவாக பல்வேறு சிறந்த நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. மேலும், எங்களுடைய விளம்பரதாரரான எல்ஐசி நிறுவனமும் இங்கு ஸ்டால் அமைத்துள்ளது. வங்கி கடன் உதவி குறித்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இரண்டு நாட்களும் அரங்கினை இலவசமாக பார்வையிட்டு பயன்பெறலாம்", என்றார்.
இந்த நிகழ்வில், பல்லாவரம் எம்எல்ஏ ஐ.கருணாநிதி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் மற்றும் பல்வேறு பில்டர்ஸ் அசோசியேஷன் முன்னணி நிர்வாகிகள் பலரும திரளாக கலந்து கொண்டனர்.





















