PM Modi vs Mamata : ’தலைதூக்கும் பாஜக தத்தளிக்கும் TMC’’ மம்தாவுக்கு செக்?
மக்களவை தேர்தல் கிளைமேக்ஸை நெருங்கி உள்ள நிலையில், மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிழைப்புக்கே முட்டி மோதி வருவதாகவும், நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அதிகபட்ச வெற்றியை பெற உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்று, ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் எப்படியாவது இம்முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ஐஎண்டிஐஏ கூட்டணியினரும், இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் பிரத்மர் மோடி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி கவிழும் பாஜக தலை ஓங்கும் என பேசியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசுகையில், ’’மேற்கு வங்கத்தை பொறுத்த வரை சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிழைப்புக்கே முட்டி மோதி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் மேற்கு வங்கத்தில் பாஜக 3 சீட்டுகள் மட்டுமே பெற்றிருந்தது. ஆனால் கடந்த தேர்தலில் மேற்கு வங்க மக்கள் எங்களுக்கு 80 சீட்டுகள் பெற்றுக்கொடுத்தார்கள். இந்த மக்களவை தேர்தலில் பாஜக சிறப்பாக வெற்றி பெற போகும் மாநிலமாக மேற்கு வங்கம் நிச்சயம் இருக்கும்.
இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து வரும் நிலையில், பாஜக மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தலை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் மீறி மக்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்து வருகின்றனர்’’ என பிரதமர் மோடி பேசியுள்ளார்.