Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்
சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்கள் தவிப்பிற்கு பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புகின்றனர். அந்த நிகழ்வை நேரலை செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது. இதனை மதுரை மாநகராட்சி பள்ளி மாணாவர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விஞ்ஞானிகளின் முகமூடிகளை அணிந்து வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு, 9 நாட்கள் பயணமாக சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியாமல், 9 மாதங்களாக அங்கேயே சிக்கித் தவித்தனர். இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன், அவர்கள் பூமி திரும்புகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க நேரப்படி, நேற்று இரவு 10.45 மணிக்கு, சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விண்கலம், அமெரிக்க நேரப்படி செவ்வாய் மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய நேரப்படி, புதன் கிழமை அதிகாலை சுமார் 3.30 மணி. அவர்கள் பூமி திரும்பும் நிகழ்வை, நாசா நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. இதைக் காண உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்திய வம்சாவளி பெண் என்பதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்புவதை வரவேற்கும் வகையில் மதுரை மஞ்ணக்கார தெரு பகுதியில் செயல்படும் சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இருவரையும் வரவேற்கும் விதமாக மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர்கள் கலிலியோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சி.வி.ராமன் உள்ளிட்ட அறிவியல் விஞ்ஞானிகள் போல் முகமூடி அணிந்து வரவேற்றனர்....இதேபோன்று இந்திய வம்சாவளி பெண் என்பதால் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரின் விண்வெளி பயணம் குறித்தும் மாணவிகள் எடுத்துரைத்து பேசினர். மேலும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்புவதை LED திரை மூலமாக ஸ்மார்ட் வகுப்பில் நேரடியாக மாணவ மாணவிகள் கண்ட்டுகளிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.





















