மேலும் அறிய

அரக்கோணம் விவகாரம்” தெய்வச்செயல் எங்கே?” ராஜ்பவன் சென்ற மாணவி | Deiva Seyal | DMK

திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முக்கிய நிர்வாகி தெய்வச்செயல் மீது அரக்கோணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருக்கு எதிராக ஆளுநர் மாளிகை வரை சென்று மாணவி புகார் அளிக்க முயற்சி செய்துள்ளார். 

திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான தெய்வச்செயல், இளம் பெண்களை கட்டாயப்படுத்தி அரசியல்வாதிகளுக்கு இரையாக்கி வருவதாக மாணவி சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசுகையில், '20 வயது பெண்களை காதலிப்பதாகக் கூறி, கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொள்வதே தெய்வச்செயலின் குறிக்கோள்.

ஐந்து வருடத்திற்கு ஒவ்வொரு 20 வயது பெண்ணை தேடி காதலித்து டார்ச்சர் செய்துள்ளார். திமுக கட்சியில் இருக்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துகொள் இல்லையென்றால் உங்கள் அப்பா அம்மாவை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டினார். வேற யாருமே கிடையாது என தெரிந்துகொண்டு தினமும் டார்ச்சர் செய்து கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டார். இந்த விஷயம் வெளியே போச்சுன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் துண்டுத் துண்டாக வெட்டிடுவேன் என மிரட்டினார். எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கிறது'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

மாணவியின் புகாரைத் தொடர்ந்து திமுகவிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி ஏற்கனவே ராணிப்பேட்டை காவல் நிலையத்திலும் டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்தார். இந்த சூழலில், தனது புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாகவும் மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தெய்வச்செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி. ஆனால், முன் அனுமதி பெறாத காரணத்தால் ஆளுநரை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

சென்னை வீடியோக்கள்

’’இனிமேல் லஞ்சம் வாங்கினால் எனக்கு WHATSAPP பண்ணுங்க’’நம்பர் கொடுத்த CM விஜய்
’’இனிமேல் லஞ்சம் வாங்கினால் எனக்கு WHATSAPP பண்ணுங்க’’நம்பர் கொடுத்த CM விஜய்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சீர்காழி புறவழிச்சாலையில் போகும் போது உஷார்! ஹெல்மெட் கொள்ளையர்கள் வெறிச்செயல்!
சீர்காழி புறவழிச்சாலையில் போகும் போது உஷார்! ஹெல்மெட் கொள்ளையர்கள் வெறிச்செயல்!
ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
போலீசாரைக் கண்டு அலறிய பைக் ஆசாமிகள்... சீர்காழியில் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கிய 'துள்ளல்' இளைஞர்கள்!
போலீசாரைக் கண்டு அலறிய பைக் ஆசாமிகள்... சீர்காழியில் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கிய 'துள்ளல்' இளைஞர்கள்!
வருமான வரி ரீஃபண்ட்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்தால் 7 நாட்களில் பெறலாம்!
வருமான வரி ரீஃபண்ட்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்தால் 7 நாட்களில் பெறலாம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget