World Wrestling Championships 2022 : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்! பதக்க வேட்டை நடத்துமா இந்தியா?
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று முதல் பெல்கிரேடில் தொடங்குகின்றன.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் இன்று முதல் பெல்கிரேட்டில் தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 800 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பல முன்னணி வீரர் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் கிரேக்கோ ரோமன் பிரிவு மல்யுத்த போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்பின்னர் வரும் 13ஆம் தேதி முதல் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன. இந்தியா சார்பில் பஜ்ரங் புனியா, ரவி தஹியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகள் இடம்பெற உள்ளனர்.
Who do you think wins between Olympic medalists @ravidahiya60 🇮🇳 and @thomasgilmanusa 🇺🇸?
— United World Wrestling (@wrestling) September 8, 2022
Gilman and Ravi are seeded first and second, respectively, and could meet for #WrestleBelgrade 57kg world gold on Saturday, September 17.#WrestleBelgrade ➡️ 2 days
Dates: September 10-18 pic.twitter.com/jPFLXuQzbK
ஃப்ரீஸ்டைல் இந்திய ஆடவர் அணி:
ரவி தஹியா(57 கிலோ எடைப்பிரிவு), பங்கஜ் மாலிக்(61 கிலோ எடைப்பிரிவு), பஜ்ரங் புனியா(65 கிலோ எடைப்பிரிவு), நவீன் மாலிக்(70 கிலோ எடைப்பிரிவு), சாகர் ஜக்லான்(74 கிலோ எடைப்பிரிவு), தீபக் மிர்கா (79 கிலோ எடைப்பிரிவு), தீபக் புனியா(86 கிலோ எடைப்பிரிவு), விக்கி ஹூடா(92 கிலோ எடைப்பிரிவு), விக்கி சாஹர் (97கிலோ எடைப்பிரிவு), தினேஷ் தன்கர்(125 கிலோ எடைப்பிரிவு)
ஃப்ரீஸ்டைல் மகளிர் அணி:
வினேஷ் போகட்(53 கிலோ எடைப்பிரிவு), சுஷ்மா சோகீன்(55 கிலோ எடைப்பிரிவு), சரிதா மோர்(57 கிலோ எடைப்பிரிவு), மான்சி அஹல்வாட்(59 கிலோ எடைப்பிரிவு), சோனம் மாலிக்(62 கிலோ எடைப்பிரிவு), ஷெஃபாலி (65 கிலோ எடைப்பிரிவு), நிஷா தஹியா(68 கிலோ எடைப்பிரிவு), ரித்திகா(72 கிலோ எடைப்பிரிவு), பிரியங்கா(76 கிலோ எடைப்பிரிவு)
.@BajrangPunia 🇮🇳 has an Olympic 🥉and a trio of world medals on his resume, but he’s still chasing that elusive world-level gold. The Indian superstar will get his shot at adding a world title to his resume on September 17-18 at the World C’ships. #TheHomeofWrestling pic.twitter.com/I3O2UY0giN
— United World Wrestling (@wrestling) September 6, 2022
கிரேக்கோ ரோமன் பிரிவு இந்திய அணி:
அர்ஜூன் ஹலகுர்கி(55 கிலோ எடைப்பிரிவு), ஞானேந்தர்(60 கிலோ எடைப்பிரிவு), நீரஜ் (63 கிலோ எடைப்பிரிவு), அஷூ(67 கிலோ எடைப்பிரிவு), விகாஸ்(72 கிலோ எடைப்பிரிவு), சச்சின்(77 கிலோ எடைப்பிரிவு), ஹர்ப்ரீத் சிங் (82 கிலோ எடைப்பிரிவு), சுனில் குமார் (87 கிலோ எடைப்பிரிவு), தீபான்ஷீ(97 கிலோ எடைப்பிரிவு) சதீஷ் (130 கிலோ எடைப்பிரிவு)
இன்று முதல் மூன்று நாட்களுக்கு கிரேக்கோ ரோமன் பிரிவு மல்யுத்த போட்டிகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஃப்ரீஸ்டைல் பிரிவு மல்யுத்த போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் மட்டுமே வென்று இருந்தது. அதை இம்முறை அதிகமான பதக்கங்களாக இந்திய வீரர் வீராங்கனைகள் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.