Karthigai Deepam Serial: உண்மையை உடைத்த ரேவதி! கல்யாணத்தை நிறுத்த வரும் விருமன் - இன்று நடக்கப்போவது என்ன?
karthigai deepam serial: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய சண்டே ஸ்பெஷல் எபிசோடில் கார்த்திக், ரேவதி திருமணத்தில் குழந்தை தீபா ரேவதியை அம்மா என கூப்பிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
யார் இந்த குழந்தை?
அதாவது, யார் அந்த குழந்தை என எல்லாரும் ரேவதியை விசாரிக்க அவள் அது என்னுடைய தோழியோட குழந்தை. ஆசிரமத்தில் வைத்து நான் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறாள்.
இதனை தொடர்ந்து கார்த்திக், ரேவதி கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்குகிறது. ராஜசேதுபதி ஊரில் இருக்கும் விருமனுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது.
கல்யாணத்தை நிறுத்த வரும் விருமன்:
உடனே அவன் நான் போய் உண்மையை சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த போறேன் என்று கிளம்பி வருகிறான். அடுத்ததாக விருமன் மண்டபத்திற்கு வருகிறான். சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்ல போவதாக அதிர்ச்சி கொடுக்கிறான். இதனால் மயில்வாகனம் விருமனை கட்டையால் அடித்து மயங்க வைக்கிறான்.
இப்படி திரும்ப திரும்ப உண்மையை சொல்ல விருமன் முயற்சி செய்கிறான், இப்டியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















