Wimbledon: வாவ்ரின்காவை எளிதாக தோற்கடித்த ஜோகோவிச்… 61வது முறையாக கிரண்ட்ஸ்லாமின் லாஸ்ட் 16 சுற்றுக்குள் நுழைந்தார்!
அதன் பின்னர் மூன்றாவது செட்டில் கொஞ்சம் எதிர்ப்பை காட்டிய வாவ்ரின்கா, அதில் போராடி தோற்றார். இதனால் ஜோகோவிச் 6-3, 6-1, 7-6(5) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
நேற்று (வெள்ளியன்று) நடைபெற்ற மூன்றாவது சுற்று மோதலில் ஸ்டான் வாவ்ரின்காவை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் விம்பிள்டனில் தனது தொடர் வெற்றி ஓட்டத்தை மேலும் தொடர்ந்தார். போட்டிக்கு முன்னதாகவே வாவ்ரிங்கா ஏற்கனவே ஏழு முறை சாம்பியனான ஜோகோவிச்சை தோற்கடிக்க வாய்ப்பில்லை என்று தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்த நிலையில், காலத்தில் அவரது எண்ணம் உண்மையாக மாறியது.
ஜோகோவிச் ஆதிக்கம்
ஜோகோவிச் வழக்கம் போல ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். முதல் இரண்டு செட்களை விரைவாக, எளிதாக வென்ற அவர், சில துல்லியமான, அதிரடியான ஷாட்களை ஆட, அதனை வாவரின்கா எதிர்கொள்ள முடியாமல் திணறினார். அதன் பின்னர் மூன்றாவது செட்டில் கொஞ்சம் எதிர்ப்பை காட்டிய வாவ்ரின்கா, அதில் போராடி தோற்றார். இதனால் ஜோகோவிச் 6-3, 6-1, 7-6(5) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
விம்பிள்டனில் தொடர் வெற்றிகள்
இந்த வெற்றியானது விம்பிள்டனில் ஜோகோவிச்சின் தொடர்ச்சியான 31வது வெற்றியைக் குறிக்கிறது. மேலும் அவர் 61வது முறையாக கிராண்ட்ஸ்லாமின் கடைசி 16 இடங்களுக்குள் வந்துள்ளார். அடுத்த சுற்றில் அவர் போலந்தின் 17-ம் நிலை வீரரான ஹூபர்ட் ஹர்காக்ஸை எதிர்கொள்ள உள்ளார். போட்டி முழுவதும், மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வாவ்ரிங்காவை, ஜோகோவிச் தனது துல்லியமான ஷாட்களால் இடைவிடாமல் தாக்கியதால், ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வாவ்ரின்கா இருந்தார்.
கையறு நிலையில் வாவ்ரின்கா
வாவ்ரின்கா வென்ற இரண்டு இறுதிப் போட்டிகள் உட்பட, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முந்தைய ஆட்டங்கள், ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவர் கடுமையாக போராடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் ஜோகோவிச்சின் சிறப்பான ஆட்டத்தால் வாவ்ரிங்காவை போட்டியில் கால் பதிக்கவே விடாமல் தவித்தார். இருப்பினும் மூன்றாவது செட்டில், வாவ்ரின்கா தனது பவர் கேமை முடுக்கிவிட்டு ஜோகோவிச்சிற்கு சவால் விட்டார். ஆனால் ஆட்டம் முடியும்போது டை-பிரேக்கரில் வென்று நேராக லாஸ்ட் 16 சுற்றுக்கு சென்றார்.
That's an outrageous winner on the run 😤#Wimbledon | @DjokerNole pic.twitter.com/V8P59SXaX5
— Wimbledon (@Wimbledon) July 7, 2023
சாதனைகளை குவிக்க தீவிரமாக உள்ள ஜோக்கோவிச்
மார்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ரோஜர் ஃபெடரரின் எட்டு விம்பிள்டன் கிரீடங்கள் ஆகிய சாதனைகளை முறியடிக்க ஜோக்கோவிச் தீவிரமாக உள்ளார். விம்பிள்டனில் ஜோகோவிச்சின் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டமே, அவர் வெல்லக்கூடிய வீரராகத் தொடர்ந்து இருக்கிறார் என்ற தெளிவான செய்தியை அவரது போட்டியாளர்களுக்கு அனுப்பிவிடுகிறது, அதுவே அவருக்கு முதல் வெற்றியாக அமைந்து விடுகிறது.
ஆட்டம் முடிந்தவுடன், இது குறித்து, "நாங்கள் இரண்டு வயதானவர்கள், இளம் துப்பாக்கிகள் கொண்டு சண்டையிடுகிறோம் - அதை ஒப்புக்கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன், " என்று கூற, கூடி இருந்தவர்கள் சிரிக்கிறார்கள்.