Tokyo பாராலிம்பிக்ஸ் : வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூபாய் 2 கோடி பரிசாக அறிவித்தது தமிழக அரசு
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு ரூபாய் 2 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றதற்காக மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூபாய் 2 கோடி பரிசாக அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் மாரியப்பனை பாராட்டியது மட்டுமில்லாமல், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனும் மாரியப்பனை தொலைபேசியில் பாராட்டினார்.
இந்த நிலையில், கடந்த முறை பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் பங்கேற்ற உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, நொய்டாவைச் வருண் சிங் பாட்டி, பீகாரைச் சேர்ந்த ஷரத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். பாராலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரை, உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு பாதிப்புகளுடன் வீரர், வீராங்கனைகள் போட்டியிடுவர்.
அவர்களது, உடல் பாதிப்புகள் ஒருவரை ஒருவரிடம் இருந்து வித்தியாசப்பட்டிருக்கும். இதனால், ஒரு விளையாட்டில் வெறும் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளின் கீழ் பிரிக்காமல், வெவ்வேறு பாதிப்புகளைப் பொறுத்து பிரிவுகள் பிரிக்கப்படும். அந்த பிரிவுகளின் கீழ் வீரர் வீராங்கனைகள் போட்டியிடுவர். ஒரே விளையாட்டின் கீழ் பிரிக்கப்படும் பிரிவுகளை சில குறியீடுகளை கொண்டு அடையாளப்படுத்துவர். அந்த வரிசையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி-42 பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்திய வீரர்கள். ஆனால், பாராலிம்பிக்கில் இம்முறை டி-63 வகை தொடரில் டி-42 பிரிவில் போட்டியிடும் வீரர்களையும் சேர்த்து நடத்தினர்.
மேலும் படிக்க : silver Medalist Mariyappan: தொடர்ச்சியாக பதக்கங்கள்.. வாழ்த்து மழையில் நனையும் மாரியப்பன்..!
இதில், பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு அபாரமாக செயல்பட்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றார். மழை காரணமாகவே மாரியப்பனால் தங்கத்தை வெல்ல முடியாமல் போனது. இருப்பினும் வெள்ளிப்பதக்கத்தை வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : Ind vs Eng: செஞ்சுரி வேணும் கோலி.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சொன்னது என்ன?!