எங்கேயும் ஆணவ படுகொலை கூடாது, மற்ற எந்தவிதமான கொலைகள் கூடாது - ஜி.கே.மணி கருத்து
பாளையங்கோட்டையில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருப்பது, எங்கேயும் ஆணவ படுகொலை கூடாது என பாமக வலியுறுத்தி வருகிறோம் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 -ஆம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி மாநாட்டுக்காக நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பாமக மாவட்ட செயலாளர் பாக்கம்.சக்திவேல், தஞ்சை மாவட்ட செயலாளர் ம.கா.ஸ்டாலின், தங்க.அய்யாசாமி, ஐயப்பன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
ஜி.கே.மணி பத்திரிகையாளர் சந்திப்பு
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, இந்த மாநாட்டின் நோக்கம் மனிதகுலத்தில் பெண்கள் மிகமிக முக்கியமானவர்கள் ,பெண்கள் இல்லாமல் குடும்பம் இல்லை, நாடு இல்லை, உலகம் இல்லை அந்த அளவிற்கு பெண்களுக்கு பெருமை சேர்க்கிற , பெண்மையை போற்றுகின்ற மாநாடாக இந்த மாநாடு அமையும். கண்ணகி சிறப்பு சேர்ந்த மண்ணில் கண்ணகி, கோவலன் நாடகம் சிறப்பாக நடைபெறஉள்ளது. பெண்களின் வீர தீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

பலதரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு
போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், எல்லா சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் இந்த மாநாட்டில் தீர்மானமாக முன்வைக்கப்படுகிறது. இது போல இன்னும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட உள்ளது. கர்நாடக, கேரளா மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. வினாடிக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழக எல்லைபகுதி, ஒக்கேனக்கல் பகுதிகளில் ஆர்பரித்து காவிரி நீர் செல்கிறது. கர்நாடக அணைகளான கிருஷ்ராஜ்சாகர், கபினி, ஆரங்கி, ஹேமாவதி இந்த அணைகள் திறக்கப்பட்டு ஒக்கேனக்கல் வழியாக வந்து மேட்டூர் அணை நிரம்பி, 30 டிஎம்சி தண்ணீர் வீணாக கொள்ளிடம், பூம்புகார் வழியாக கடலில் கலக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மருத்துவர் அய்யா சொல்லுவது பாட்டாளி மக்கள் கட்சி சொல்லுவது காவிரியில் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும், தண்ணீர் சேமிக்கபட வேண்டும், இந்த டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி மழைக்காலங்களில் வெள்ளசேதம், தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. வறச்சி காலங்களில் டெல்டா நெல்வயல்கள் எல்லாம் காய்ந்து வெடித்து காணப்படுகிறது. தடுப்பணைக்கட்டி தண்ணீரை சேகரிக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. மத்திய அரசு மாநில அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டும். மாநில அரசு நிதி இல்லை என்று தட்டிக் கழிக்க கூடாது. மத்திய அரசும் நிதி ஒதுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

ஒட்டுக் கேட்கும் கருவி விவகாரம்
தைலாபுரத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்தது அதற்கான விசாரணை எப்படி இருக்கு என்ற கேள்விக்கு? இதையெல்லாம் எங்கள் மருத்துவர் அய்யா கண்காணித்துக்கொண்டு வருகிறார். மருத்துவர் அய்யா இதற்கான முழு விளக்கம் அளிப்பார். இந்த மாநாட்டில் அன்புமணி வருவார் என ஏற்கனவே செல்லியிரந்தோம். அவர் வருவார் என எதிர்பார்க்கிறோம். மருத்துவர் ஐயா பிறந்தநாளுக்கு மருத்துவர் அன்புமணி அவர் வருவார் என்று எதிர்பார்த்தோம், எங்கள் கட்சிக்குள் நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது. இந்த சூழல் மிக விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். இந்த தீர்வுக்கு மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி அவர்களும் சேர்ந்து முடிவெடுப்பார்கள் என நாங்கள் எல்லாம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். இதுக்குமேல் கட்சி பிரச்சனை, உட்கட்சி பிரச்சினை செய்தி நிறையா சொல்லக்கூடாது சொல்றதும் சரியா இருக்காது.

ஆணவக் கொலை விவகாரம்
நெல்லை பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் கவின் என்ற இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருபது, எங்கேயும் ஆணவபடுகொலை கூடாது, மற்ற எந்தவிதமான கொலைகள் கூடாது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறோம். அய்யா என்ற திரைபடத்தின் கதை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை? சொல்லக்கூடாது என்றார்.






















