Tokyo olympics: மகளிர் ஹாக்கி : அயர்லாந்தை வீழ்த்தி 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த முதல் வெற்றி !
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குரூப் போட்டியில் இன்று இந்திய ஹாக்கி அணி அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் இரு அணிகளின் வீராங்கனைகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து முதல் கால்பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது கால்பாதியிலும் இரு அணியின் வீராங்கனைகளுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த பெனால்டி கார்னர் வாய்ப்புகள் அனைத்தும் வீணடிக்கப்பட்டன.
இறுதியில் முதல் பாதியின் முடிவில் 0-0 என இரு அணிகளும் கோல் அடிக்காமல் சென்றனர். இந்திய அணி சிறப்பாக விளையாடிய சில வாய்ப்புகளை பெற்றாலும் அவை எதையும் கோலாக மாற்ற முடியாமல் தவித்தது. அதன்பின்னர் மூன்றாவது பாதியிலும் இந்திய அணிக்கு தொடர்ந்து பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதையும் இந்திய வீராங்கனைகள் வீணடித்தனர். மூன்றாவது பாதியின் முடிவிலும் இரு அணியின் வீராங்கனைகள் கோல் அடிக்கவில்லை. கடைசி கால்பாதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய இந்திய மகளிர் அணி ஒரு ஃபில்டு கோல் அடித்து அசத்தியது. இதன்மூலம் 1-0 என முன்னிலை பெற்றது.
Hockey: First win for women's team at Olympics since 1980.
— India 🇮🇳 at #Tokyo2020 (@IndiansportFeed) July 30, 2021
Equation for India to qualify for QF👇
- India as to defeat SA
- Ireland must lose/draw against GB #Tokyo2020
அதன்பின்னர் அயர்லாந்து அணி கோல் அடிக்க எடுத்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. கடைசியாக ஒலிம்பிக் போட்டிகளில் 1980 போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒரு போட்டியில் வென்றது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. எனவே 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
3ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்திய மகளிர் அணி ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடம் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. முதல் குரூப் போட்டியில் இந்திய மகளிர் அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அதன் பின்னர் ஜெர்மனி உடன் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
மூன்றாவது போட்டியில் குரூப் போட்டியில் இந்திய அணி நடப்புச் சாம்பியன் பிரிட்டனிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து. குரூப் பிரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்திய மகளிர் தனது கடைசி குரூப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை எதிர்த்து நாளை விளையாடுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 8.45 மணிக்கு தொடங்குகிறது. அந்தப் போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் நான்காவது இடம் பிடித்து இந்திய மகளிர் அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லோவ்லினா பார்கோயின் !