Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லோவ்லினா பார்கோயின் !
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 69 கிலோ குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் வெற்றி பெற்று இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளில் மகளிர் 69 கிலோ எடை ப் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் ஜெர்மனி நாட்டின் நடின் ஏப்டெஸை எதிர்த்து மோதினார். இதில் லோவ்லினா பார்கோயின் 3-2 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முதல் இந்திய வீராங்கனையாக முன்னேறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் அவர் சீன தைபேயின் நியன் செனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் சிறப்பாக சண்டை செய்தார். சீன தைபே வீராங்கனையும் சிறப்பாக சண்டை செய்தார். முதல் ரவுண்டில் லோவ்லினா சற்று முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது ரவுண்டிலும் சீன தைபே வீராங்கனையை எளிதாக எதிர்கொண்டார். இறுதியில் 4-1 என்ற கணக்கில் லோவ்லினா வெற்றி பெற்றார். அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறினால் வெண்கலப்பதக்கம் உறுதியாகிவிடும். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டையில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை லோவ்லினா உறுதி செய்தார்.
Lovlina you beauty!
— India_AllSports (@India_AllSports) July 30, 2021
Lovlina Borgohain ensures 2nd medal for #TeamIndia at Tokyo; Beats former World Champion from Taipei 4:1 to storm into Semis.
Such a proud moment folks #Tokyo2020withIndia_AllSports #Tokyo2020 pic.twitter.com/2Lhpy9OYLT
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் 91+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் பங்கேற்றார். அவர் இரண்டாவது சுற்றில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ ப்ரோவூனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் சிறப்பாக சதீஷ் குமார் சண்டை செய்தார். அதேபோல் இரண்டாவது ரவுண்டிலும் அவர் சிறப்பாக ஜமைக்க வீரரின் முயற்சிகளை தடுத்தார். முதல் இரண்டு ரவுண்ட் சதீஷ் குமாருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் மூன்றாவது ரவுண்டில் ஜமைக்கா வீரர் இந்திய வீரரை நாக் அவுட் செய்ய முயன்றார். அதை சதீஷ் குமார் சிறப்பாக எதிர்கொன்டார். இறுதியில் 4-1 என்ற கணக்கில் சதீஷ் குமார் வென்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் இரண்டாவது சுற்றில் பூஜா ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பூஜா ராணி அல்ஜிரியா நாட்டைச் சேர்ந்த செயிப் இசார்க்கை எதிர்த்து சண்டை செய்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜிரியா வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் இரண்டாவது சுற்றில் கொலம்பியா வீராங்கனை வெலன்சியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். மேலும் ஆடவர் பிரிவில் மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ)ஆகிய மூவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
மேலும் படிக்க: ஒலிம்பிக் மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை : தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதிபெற்று அசத்தல் !
மேலும் படிக்க : ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்'