![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சாண்டா தாத்தா வேடமிட்டு தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளார்.
![மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! MS Dhoni as Santa Claus celebrating Christmas 2024 along with wife Sakshi and daughter Ziva மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/cd60e9369a8baea46e457c5e3249425b1735130423976729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சாண்டா தாத்தா வேடமிட்டு மகளுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பொதுவாக பண்டிகை வந்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வண்ண வண்ண விளக்குகளும், கிறிஸ்துமஸ் மரம், இனிப்புகள், குடில், பரிசுப்பொருள்களும்தான்.
சாண்டா தாத்தாவாக மாறிய தோனி:
வீதிகளிலும், அனைத்து வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்புகள் கண்களைக்கவரும். மேலும் கிறிஸ்துமஸ் நாளில் குடும்பத்தினர் நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.
இயேசுவின் பிறந்தநாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தில் சான்டா க்ளாஸ் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பரிசு கொடுப்பார் என்பது சுவாரஸ்யமான நம்பப்படும் கதை. அந்த வகையில், கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, சாண்டா தாத்தா வேடமிட்டு தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளார். மனைவி சாக்சி, மகள் ஸிவா உள்ளிட்டோருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
MS Dhoni as Santa Claus celebrating Christmas. 🎄 pic.twitter.com/jpnKuUNHEQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 25, 2024
இதேபோல, தனது குழந்தைகள் உயிர், உலக், கணவன் விக்னேஷ் சிவன் மற்றும் அம்மாவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை நயன்தாரா பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், குழந்தைகள் மற்றும் அவரது அம்மா என அனைவரும் சிகப்பு நிற ஆடையில் அழகாக போஸ் கொடுத்துள்ளனர்.
கிறிஸ்துமஸை முன்னிட்டு சென்னையில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவில் அதிகளவிலான மக்கள் குவிந்தனர். அதொடு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்று இறைவழிபாடு நடத்தினர். இதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையும் படிக்க: Biryani Market: ஆத்தாடி..! ஆண்டுக்கு ரூ.10,000 கோடி, பிரியாணியை ரவுண்டு கட்டும் தமிழர்கள் - சென்னையில் மட்டும் இவ்வளவா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)