மேலும் அறிய
Advertisement
Nandhitha PV : 17 ஆண்டு கால கனவு.. சாதிக்கும் சேலம் வீராங்கனை நந்திதா.. எதிர்பார்ப்புகளுடன் வரவேற்கும் மக்கள்..
" தனது 17 ஆண்டு கால கனவு தற்பொழுது நனவாகியுள்ளதாக தெரிவிக்கிறார்" சேலம் சங்ககிரி பகுதியை சேர்ந்த வீராங்கனை நந்திதா.
வழக்கத்திற்கு மாறாக தமிழகம் செஸ் வீரர்களுக்கு அமோக வரவேற்பை கொடுத்து வருகிறது. செஸ் ஒலிம்பியா நடைபெறும் அரங்கத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவரை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் , பெண்கள், சிறுவர்கள், என பலரும் போட்டி போட்டுக் கொண்டு அவரிடம் புகைப்படம், எடுத்துக் கொள்வதும் ஆட்டோகிராப் வாங்கிக் கொள்வதும் என வரவேற்பை கொடுத்து வருகின்றனர். நடந்து கொண்டிருக்கும் செஸ் ஒலிம்பியார் போட்டியில் 10 சுற்றுகளில் 8.5 புள்ளிகளைப் பெற்று கவனத்தை வைத்துள்ளார் , பள்ளத்தூர் வெங்கடாசலம் நந்திதா ( PV Nandhidhaa ).
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் நந்திதா. இவருக்கு சிறு வயது முதலே செஸ் மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. ஒருபுறம் செஸ் விளையாடிக்கொண்டே படிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கடந்து வந்த பாதை
2015 , பெண்கள் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றினார். 2016 ஆம் ஆண்டு உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம். 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் 17-வது பெண் கிராண்ட் மாஸ்டராக ஆனார். 2020-ஆம் ஆண்டு ஆசிய ஆன்லைனில் நடைபெற்ற ஆன்லைன் நேஷனல் போட்டியில் தங்கம் வென்றார். 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வந்தார். தற்பொழுது மகாபலிபுரத்தில் நடைபெற்று வரும் , செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனது வெற்றிகள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக நந்திதா விளையாடி வருகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சி பிரிவில் விளையாடி வரும் நந்திதா முதலில் நடைபெற்ற ஐந்து சுற்றுகளில், ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றார். ஆறாவது சுற்றில் போட்டியை சமனில் முடித்தார். மீண்டும் 7-வது சுற்றில் வெற்றியை பெற்ற நந்திதா. எதிர்பாராத விதமாக 8-வது சுற்றில் தோல்வியைத் தழுவினார். மீண்டும் நந்திதா 9 மற்றும் 10 ஆகிய சுற்றுகளில் வெற்றி பெற்று அசத்தி உள்ளார்
நந்திதா கூறுவது என்ன ?
இது என்னுடைய முதல் ஒலிம்பியாட் போட்டி அதுவும் என்னுடைய நாடு என்னுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டில் நடைபெறுவது மகிழ்ச்சி மேலும் எனக்குப் பெருமையாக உள்ளது. இதுதான் 17 ஆண்டுகளாக செஸ் விளையாடி வருகிறேன். ஆனால் இப்பொழுது பார்ப்பதற்கு அனைத்தும் புதுமையாக உள்ளது. இந்தியாவில் செஸ் போட்டிகள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. யாராவது செஸ் போட்டி விளையாட வேண்டும் , என நினைத்தால், செஸ் விளையாடுவதில் கவனம் செலுத்துங்கள். இன்ஜினியரிங் படிக்க வேண்டாம், இது எனது தனிப்பட்ட கருத்து, நான் இன்ஜினியரிங் படித்து எதுவும் செய்யவில்லை என கூறுகிறார்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion