மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
களைகட்டும் திருவிழா... பறக்குது பார் வகை, வகையான பட்டம்..! மகாபலிபுரத்தை சுத்து போட்ட பொதுமக்கள்..!
kite festival 2023 mahabalipuram : மாமல்லபுரத்தில் இரண்டாவது நாளாக நடைபெறும் பட்டம் விடும் திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மாமல்லபுரத்தில் இரண்டாவது நாளாக நடைபெறும் பட்டம் விடும் திருவிழாவில் அந்த பகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
பட்டம் விடும் திருவிழா ( kite festival 2023 mahabalipuram )
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய இந்த திருவிழா வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12,000 சுற்றுலா பயணிகள் இந்த காத்தாடி திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இரண்டாவது நாளான இன்று மதியம் 5 மணி வரை 13,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ஆன்லைனில் 150-ரூபாய்க்கும், நேரடியாக 200-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பட்டம் விடும் திருவிழாவை நேரடியாக கண்டு களித்தனர்.
பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள்
இதில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் கலந்து கொண்டு பட்டங்களை விட்டு வருகின்றனர். மேலும், இன்று ஒரே நாளில் மட்டும் 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை கண்டு களித்தனர்.
மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆறு மணிக்கு மேல் துவங்கிய இசைக்கச்சேரியும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்து ரசித்தனர். இந்தப் போட்டி நாளை வரை நடைபெற உள்ளது. நாளை சுதந்திர தினம் முன்னிட்டு விடுமுறை நாள் என்பதால் அதிக பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று மாமல்லபுரத்தில் அலை சரக்கு போட்டியும் நாளை முதல் நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி ( world surf league Mamallapuram ) நாளை தொடங்கி 20 -ம் தேதி வரை நடைபெற உள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி ( world surf league chennai ) நடைபெற உள்ளது. நாளை முதல் 20ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 11 நாடுகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான துவக்க விழா கோவளத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
3000 தர புள்ளிகளை கொண்ட இந்த சர்வதேச போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலை சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்
காஞ்சிபுரம் கோவில் செய்திகள் :
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion