Valentines Day Movie Release : காதலர் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும் 11 படங்கள்
Valentines Day Movie Release 2025 Tamil : இந்த ஆண்டு காதலர் தினத்தன்று திரையரங்கில் மொத்தம் 11 தமிழ் படங்கள் வெளியாக இருக்கின்றன

இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு டிராகன் , நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வெளியாக இருந்தன. அஜித்தின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான காரணத்தினால் இந்த படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நிலவரப்படி பிப்ரவரி 14 ஆம் தேதி மொத்தம் 11 தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக இருக்கின்றன.
காதல் என்பது பொதுவுடைமை
ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் மலையாள இயக்குநர் ஜியோ பேபி வழங்கும் படம் காதல் என்பது பொதுவுடைமை. லிஜோமோல் ஜோஸ், ரோகினி, வினீத், காலேஷ் ராமானந்த், அனுஷா, தீபா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒருபாலீர்ப்பு காதலர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.
2K லவ் ஸ்டோரி
இயக்குநர் சூசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 2K லவ் ஸ்டோரி. ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜ், பால சரவணன், சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், ஜி.பி.முத்து மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டி. இமான் இசையமைத்துள்ளார். இன்றைய தலைமுறையை மையப்படுத்திய ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ளது இப்படம் .
பேபி & பேபி
ஜெய், சத்யராஜ் , யோகி பாபு, கீர்த்தனா , சாய் தன்யா, பிரக்யா நாக்ரா, இளவரசு, ஸ்ரீமன் , ஆனந்தராஜ் , நிழல்கள் ரவி , சிங்கம்புலி , ரெடின் கிங்ஸ்லி , மொட்டை ராஜேந்திரன், விஜய் டிவி - தங்கதுரை, ராமர் , பிரதோஷ் , சேசு, காளிகி ராஜா , நெல்லை மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படல் பேபி & பேபி . பிரதாப் இயக்கியுள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்
ஒத்த ஓட்டு முத்தையா
இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஒத்த ஓட்டு முத்தையா. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
ஃபயர்
இயக்குநர் ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயதி ஷான், சுரேஷ் சக்ரவர்த்தி, சிங்கம்புலி ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ஃபயர் (Fire). ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
இப்படங்கள் தவிர்த்து வெட்டு , படவா , கண் நீரா , அது வாங்குனா இது இலவசம் , வருணன் , ஆகிய படங்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

