Retro First Single : தேவர் மகன் லுக்கில் திரும்பிய சூர்யா..வெளியாகிறது ரெட்ரோ படத்தின் முதல் பாடல்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

சூர்யா
ஆன் ஸ்கிரீல் தனது எனர்ஜியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் வெளியான கங்குவா படம் எதிர்பார்ப்பை பெறாத நிலையில் சூர்யா மீது நிறைய விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வைக்கப் படுகின்றன. ஆனால் சைலண்டாக அடுத்தடுத்த படங்களில் விட்டதை பிடிக்க ஓடுகிறார் சூர்யா. அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் ரசிகர்களிடம் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் சூர்யா காம்போ நிச்சயமாக புதிதாக இருக்கும் என ரசிகர்கல் எதிர்க்கிறார்கள்.
ரெட்ரோ
சூர்யா , புஜா ஹெக்டே , கருணாகரன் , ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
ரெட்ரோ முதல் பாடல்
ரெட்ரோ முதல் பாடலான கண்ணாடி பூவே நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இப்பாடலின் ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சூர்யாவின் லுக் ரசிகர்களை இன்ஸ்டண்டாக கவர்ந்துள்ளது. தேவர் மகன் கமல் லுக்கில் சூர்யா இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
A little pill from the Love Drug...❤️🔥
— karthik subbaraj (@karthiksubbaraj) February 12, 2025
Can't wait for u all to listen to the magic @Music_Santhosh and @Lyricist_Vivek have created. #KannadiPoove 1st single from #Retro dropping tomorrow at 5pm #RetroFromMay1 #LoveLaughterWar pic.twitter.com/oSV5Jg9dQb

