மேலும் அறிய
Advertisement
ஆடி கடைசி வெள்ளியில் சிறப்பு பூஜை.. 51 ஆயிரம் வளையல்கள்.. பிரம்மாண்டமாக காட்சியளித்த முத்துமாரியம்மன்!
ஆடி திருவிழாவை ஒட்டி 51,000 வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் பிரமாண்டமாக காட்சியளித்தார்
ஆடி திருவிழாவை ஒட்டி 51,000 வளையலுகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் பிரமாண்டமாக காட்சியளித்தார்.
ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன்
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவிலில் திருவிழா, உற்சவம், திருவீதி உலா, கூழ்வார்த்தல் என மாத முழுவதும் அம்மன் கோவிலில் கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வெள்ளத் அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீசெல்ல முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகின்றன.
51,000 வளையல்கள்
இந்த ஆண்டு 51 வது ஆண்டு ஆடி மாத விழாவை சிறப்பிக்கும் வகையில் விழா குழுவினர் வேலாத்தம்மன் கோவில் தெரு இளைஞரணி ஏற்பாட்டில் இன்று ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் அம்மனுக்கு 51 ஆயிரம் வளையலுகளால், சிறப்பு அலங்காரம் செய்து வளையல்களை தோரணமாக கட்டியும், பூ செண்டு போல் விதவிதமாக வடிவமைத்து அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வளையலால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு அம்மன் காட்சி தருவதை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆடி மாசம் கடைசி வெள்ளி என்பதால் வழக்கத்தை விட அதிக பொதுமக்கள் மற்றும் பெண்கள் காத்திருந்து அம்மனை தரிசித்துவிட்டு சென்றன
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion