LSG vs PBKS LIVE Score: பஞ்சரான பஞ்சாப்; முதல் வெற்றியை ருசித்த லக்னோ!
LSG Vs PBKS LIVE Score Updates: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
LIVE

Background
LSG vs PBKS LIVE Score: பஞ்சரான பஞ்சாப்; முதல் வெற்றியை ருசித்த லக்னோ!
பஞ்சாப் அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ளது.
LSG vs PBKS LIVE Score: 150 ரன்களை எட்டிய பஞ்சாப்!
பஞ்சாப் அணி 17. 3 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
LSG vs PBKS LIVE Score: சாம் கரன் டக் அவுட்!
பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாம் கரன் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ஆட்டமிழ்ந்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
LSG vs PBKS LIVE Score: விக்கெட்டுகளை அள்ளி பஞ்சாப்புக்கு நெருக்கடி கொடுக்கும் லக்னோ!
ஷிகர் தவான் தனது விக்கெட்டினை 50 பந்தில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
LSG vs PBKS LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

