PBKS vs DC LIVE Score: வெற்றியோடு தொடங்கிய பஞ்சாப்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி!
PBKS vs DC LIVE Score, IPL 2024: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
PBKS vs DC, IPL 2024: ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி, மொகாலியில் நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணியை, சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில், இதுவரை கோப்பையை வென்றிடாத ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ்மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி - பஞ்சாப் மோதல்:
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசயிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் கண்டுகளிக்கலாம்.
பிளேயிங் லெவன்:
பஞ்சாப்: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (WK), ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங்.
இம்பேக்ட் பிளேயர்ஸ்: ரிலீ ரோசோவ், பிரப்சிம்ரன் சிங், தனய் தியாகராஜன், ஹர்பிரீத் சிங், வித்வத் கவேரப்பா.
டெல்லி: ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா
இம்பேக்ட் பிளேயர்ஸ்: அபிஷேக் போரல், முகேஷ் குமார், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், விக்கி ஒஸ்ட்வால், பிரவின் துபே
நேருக்கு நேர்:
இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தலா 16 முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் டெல்லி அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 231 ரன்களையும் குறைந்தபட்சமாக 67 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 202 ரன்களையும், குறைந்தபட்சமாக 104 ரன்களையும் சேர்த்துள்ளது. கடைசியாக இரு அணிகளும் விளையாடிய 5 போட்டிகளில் டெல்லி நான்கு போட்டிகளிலும், பஞ்சாப் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
மொகாலி மைதானம் எப்படி?
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாக மொகாலி அறியப்படுகிறது. அதேநேரம், அண்மைக் காலமாக பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்கும் மைதானமாகவும் உள்ளது.
PBKS vs DC LIVE Score: வெற்றியோடு தொடங்கிய பஞ்சாப்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி!
19.2 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
PBKS vs DC LIVE Score: ஷஷாங்க் டக் அவுட்!
கலீல் அகமது 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டியை டெல்லி பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
PBKS vs DC LIVE Score: சாம் கரன் க்ளீன் போல்ட்!
அதிரடியாக விளையாடி வந்த சாம் கரன் தனது விக்கெட்டினை 47 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்த நிலையில் கலீல் அகமது பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார்.
PBKS vs DC LIVE Score: வெற்றியை நெருங்கும் பஞ்சாப்!
பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்துள்ளது.
PBKS vs DC LIVE Score: 150 ரன்களைக் கடந்த பஞ்சாப்!
பஞ்சாப் அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.