IPL 2024 MI Vs GT LIVE Score: மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
IPL 2024 MI Vs GT LIVE Score Updates: மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE
Background
17வது ஐபிஎல் சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் 5வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று அதாவது மார்ச் மாதம் 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் கடந்த 11 ஆண்டுகளாக தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெறுமா என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணியும் குஜராத் அணியும் தங்களது அணிக்கு சிறப்பான வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்களது அணியை வலுப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மும்பை அணி தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கோட்ஸியை அணியில் சேர்த்துள்ளது. அதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியினை வழிநடத்திக் கொண்டு வந்த ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியில் இருந்து ட்ரேட் செய்தது. இதுமட்டும் இல்லாமல் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பையும் வழங்கியுள்ளது. மேலும் தன்னிடம் இருந்த கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விற்றது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் அந்த அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவரான சுப்மன் கில் குஜராத் அணியை வழிநடத்தவுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவர 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 வெற்றியை தனதாக்கியுள்ளன. குஜராத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 218 ரன்களையும், குறைந்தபட்சமாக 152 ரன்களையும் எடுத்துள்ளது. அதேநேரம், மும்பை அணிக்கு எதிராக குஜராத் ஜெயிண்ட்ஸ்ஸ் அணி அதிகபட்சமாக 233 ரன்களையும், குறைந்தபட்சமாக 172 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற அதிகப்படியான முயற்சியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
IPL 2024 MI Vs GT: மும்பைக்கு 12வது ஆண்டாக தொடரும் சோகம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அசத்தல் வெற்றி!
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தனது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்து வருகின்றது.
IPL 2024 MI Vs GT LIVE Score: ஹர்திக் பாண்டியா அவுட்!
ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை 4 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
IPL 2024 MI Vs GT LIVE Score: கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை
மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.
IPL 2024 MI Vs GT LIVE Score: கோட்ஸீ அவுட்!
கோட்ஸீ தனது விக்கெட்டினை 19வது ஓவரின் கடைசி பந்தில் இழந்து வெளியேறினார்.
IPL 2024 MI Vs GT LIVE Score: 10 பந்தில் 21 ரன்கள் தேவை
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 10 பந்தில் 21 ரன்கள் தேவைப்படுகின்றது.