மேலும் அறிய

KKR vs RR Innings Highlights: நரைன் சூறாவளி சதம்; எடுபடாத அஸ்வின், சாஹல் வியூகம்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

IPL 2024 KKR vs RR Innings Highlights: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 223 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. 
இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கும் சிறப்பாக பந்து வீசவேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கும் தொடக்கத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. 

அதாவது ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் பிலிப் சால்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை ரியான் ப்ராக்கும், மூன்றாவது ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை ஆவேஷ் கானும் தவறவிட்டனர். ஆனால் நான்காவது ஓவரை வீசிய ஆவேஷ் கான் பிலிப் சால்ட்டுக்கு பந்து வீசி, அவரே கேட்ச் பிடித்து மிரட்டவைட்த்தார். பவர்ப்ளேவில் ஒரு விக்கெட்டினை இழந்திருந்தாலும் கொல்கத்தா அணியின் ரன்ரேட் உயர்ந்தவண்ணமே இருந்தது. குறிப்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய ரகுவன்ஷி அதிரடியாக பவுண்டரிகளை விளாச, தொடக்க வீரர் சுனில் நரைனும் அதிரடியாக விளையாட ஆட்டத்தில் சூடு பிடுத்தது, பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 50 ரன்களை எளிதாகக் கடந்தது. 

தொடர்ந்து அதிடியாக இந்த கூட்டணி விளையாட கொல்கத்தா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து கொண்டே இருந்தது. 10 ஓவரில் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது. அஸ்வின் மற்றும் சஹாலை விளாசு விளாசு என விளாசிய சுனில் நரைன் 29 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார். அதிரடியாக விளையாடி வந்த ரகுவன்ஷி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரும் தனது விக்கெட்டினை 11 ரன்களுக்கு இழக்க, அடுத்து களமிறங்கினார் ரஸல். 

சுனில் நரைன் மற்றும் ரஸல் கூட்டணி சிறப்பாக விளையாடி அதிரடியாக ரன்கள் குவித்தது. ஆனால் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை எட்டினார். சுனில் நரைன் 11 பவுண்டரியும் 6 சிக்ஸரும் விளாசினார். சுனில் நரைன் கொல்கத்தா அணிக்காக மூன்றாவது வீரராக சதம் விளாசியுள்ளார். 17வது ஓவரின் முதல் பந்தில் ரஸல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.  அதேபோல் சுனில் நரேன் தனது விக்கெட்டினை 18வது ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் சஹல் இருவரும் இணைந்து 103 ரன்களை வாரிக் கொடுத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Embed widget