CSK vs PBKS LIVE Score: எடுபடாத சென்னை பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!
IPL 2024 CSK vs PBKS LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
LIVE

Background
CSK vs PBKS LIVE Score: தொடரும் சென்னையின் தோல்விப் பயணம்!
சென்னை அணி பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
CSK vs PBKS LIVE Score: எடுபடாத சென்னை பவுலிங்; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியது.
CSK vs PBKS LIVE Score: 150 ரன்களில் பஞ்சாப்!
16.4 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
CSK vs PBKS LIVE Score: மெய்டன் ஓவர் வீசி மிரட்டிவிட்ட முஸ்தஃபிசூர்!
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ஆட்டத்தின் 15வது ஓவரில் ஒரு ரன்கூட கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசி பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்.
CSK vs PBKS LIVE Score: ரூஸோ அவுட்!
சிறப்பாக விளையாடி வந்த ரூஸோ 23 பந்தில் 43 ரன்கள் சேர்த்து ஷர்துல் தாக்கூர் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

