SRH VS RR : பலம்கொண்ட ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதல்.. புள்ளி விவரங்கள், வெற்றி வாய்ப்பு இதுதான்..!
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இதில் இன்று நடக்கும் 4வது ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டியானது மாலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நேருக்கு - நேர்
2008 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் வலம் வரும் ராஜஸ்தான் அணியும், 2012 ஆம் ஆண்டில் அறிமுகமான ஹைதராபாத் அணியும் இதுவரை 16 ஆட்டங்களில் மோதி தலா 8 வெற்றிகளை இரு அணிகளும் பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி அதிகப்பட்சமாக 201 ரன்களையும், குறைந்தப்பட்சமாக 127 ரன்களையும் ராஜஸ்தானுக்கு எதிராக பதிவு செய்துள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி அதிகப்பட்சமாக 220 ரன்களையும், குறைந்தப்பட்சமாக 102 ரன்களையும் பெற்றுள்ளது.
கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றி உதவினர். அதேசமயம் இரு அணிகளும் ஹைதராபாத்தில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நேருக்கு நேர் மோதியது.
இதில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேசமயம் கடைசியாக ஹைதராபாத் - ராஜஸ்தான் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஹைதராபாத் அணியின் உள்ளூர் மைதானமாக ராஜீவ் காந்தி மைதானத்தில் ராஜஸ்தானுடன் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது கூடுதல் பலம்.
இரு அணி வீரர்களின் விவரம் (கணிப்பு):
ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மேயர், ரியான் பராக், ஆகாஷ் வசிஷ்ட், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின்
ஹைதராபாத்:
புவனேஷ்வர் குமார் (கேப்டன்), அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், அகேல் ஹூசைன், உம்ரான் மாலிக், நடராஜன்