Mumbai CSK Playoff: அண்ணன் - தம்பியை ஓடவிட்ட ஐபிஎல்லின் மம்பட்டி, கடப்பாரை..சென்னை, மும்பை அணிகள் அசத்தல்
ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ அணிகளை முதல்முறையாக வீழ்த்தி சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே-ஆஃப் சுற்றின் அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ அணிகளை முதல்முறையாக வீழ்த்தி சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே-ஆஃப் சுற்றின் அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை:
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் உலகின் பணக்கார கிரிக்கெட் தொடராக பார்க்கப்படுகிறது. அத்தகையே ஐபிஎல் தொடருக்கே அடையாளம் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். காரணம் இந்த இரு அணிகள் மட்டுமே 9 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளதோடு, அதில் உள்ள தோனி மற்றும் ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களும் தான். இந்த அணிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது போன்று, எண்ணற்ற செல்லப்பெயர்களும் உண்டு. அதில் சென்னை அணிக்கு மம்பட்டி அணி என்பது, மும்பை அணிக்கு கடப்பாரை அணி என்பது சமூக வலைதளங்களில் பிரபலமானது.
எதற்கு இந்த பெயர்கள்:
எத்தகைய கடினமானதையும் வெட்டி எடுக்கும் மம்பட்டி போல எத்தகைய கடினமான சூழலையும் சென்னை அணி எதிர்கொள்ளும் என்பதையும், மும்பை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கடப்பாரையை போன்று ஆழமான மற்றும் வலுவான பிளேயிங் லெவனை கொண்டு வெற்றிகளை குவிக்கும் என்பதையும் விளக்கும் வகையில் இந்த பெயர்கள் ரசிகர்களால் சூட்டப்பட்டுள்ளன.
தொடர்ந்த மோசமான வரலாறு:
இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டிருந்தாலும், ஒரு மோசமான வரலாறையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் சுமந்து வந்தன. அதன்படி, கடந்தாண்டு அறிமுகமான குஜராத் அணியை சென்னையும், லக்னோ அணியை மும்பையும் ஒரு முறை கூட வீழ்த்த முடியாமல் இருந்தது. மேற்குறிப்பிட்ட இரு ஜோடி அணிகளும் முதல் மூன்று முறை மோதியபோதும் முறையே குஜராத் மற்றும் லக்னோ அணிகள் தான் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்து வந்தன. இதனால் ரசிகர்கள் சற்றே அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் தான், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
முதல் அடியை கொடுத்த மம்பட்டி சென்னை:
தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் குவாலிபையர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 172 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் ரன் குவித்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 20 ஓவர் முடிவில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மம்பட்டி சென்னை அணி, முதல் மூன்று தோல்விகளுக்கு முக்கியமான பிளே-ஆஃப் சுற்றில் குஜராத் அணியை பழிதீர்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லக்னோவை பொளந்த கடப்பாரை மும்பை:
இதையடுத்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 182 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியோ வெறும் 101 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் ஏற்கனவே பெற்ற 3 தோல்விகளுக்கு பழிவாங்கியதோடு, நடப்பு தொடரிலிருந்தே லக்னோ அணியை வெளியேற்றியது கடப்பாரை மும்பை அணி.
இதன் மூலம் எத்தனை முறை அடிக்கிறோம் என்பதல்ல முக்கியம், எத்தகைய சூழலில் அடிக்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதை விளக்குகின்றன ஐபிஎல் தொடரை கட்டி ஆளும் சென்னை மற்றும் மும்பை அணிகளின்.