(Source: ECI/ABP News/ABP Majha)
IPL Auction 2025 LIVE: இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! தட்டித் தூக்கப்போவது யார்?
IPL Auction 2025 LIVE: அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் இன்று சவுதி அரேபியாவில் நடக்கிறது. ஏலத்தின் உடனடி அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் களமிறங்க உள்ள வீரர்களுக்கான, மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் இந்த ஏலம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த மெகா ஏலம் அனைத்து பத்து உரிமையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது மற்றும் இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
நட்சத்திர வீரர்கள்:
ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் மற்றும் பல இந்திய நட்சத்திர வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பெரிய இந்தியப் பெயர்களைத் தவிர, வெளிநாட்டு நட்சத்திரங்களான ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க், லியாம் லிவிங்ஸ்டோன், ட்ரெண்ட் போல்ட் மற்றும் பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ஐபிஎல் 2025 மெகா ஏல தேதி மற்றும் நேரம் (IPL Auction 2025 Time)
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கும்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம்: மொத்த வீரர்களின் எண்ணிக்கை
இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அடங்குவர். 10 அணிகளில் மொத்தமாக 204 நிரப்பப்பட உள்ளன. இதில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் ஜியோசினிமா செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதை தொலைக்காட்சியில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை தொடரலாம்.
அணிகள் கைவசம் உள்ள தொகை
IPL Auction 2025 LIVE Updates: ஐபிஎல் 2025 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் 110.5 கோடியுடன் அதிக தொகையை கைவசம் கொண்டுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் குறைந்தபட்சமாக 41 கோடி ரூபாயை கைவசம் கொண்டுள்ளது.
- பஞ்சாப் : ரூ.110.5 கோடி
- பெங்களூர்: ரூ. 83 கோடி
- டெல்லி : ரூ.73 கோடி
- லக்னோ : ரூ. 69 கோடி
- குஜராத் : ரூ. 69 கோடி
- சென்னை : ரூ.55 கோடி
- கொல்கத்தா: ரூ. 51 கோடி
- மும்பை:ரூ. 45 கோடி
- ஐதராபாத்: ரூ.45 கோடி
- ராஜஸ்தான்: ரூ.41 கோடி
ஏலத்தை தீர்மானிக்கப்போகும் பஞ்சாப்! ப்ரீத்தி ஜிந்தாவிடம் இருக்கும் 110 கோடி!
பஞ்சாப் அணியின் கைவசம் 110 கோடி ரூபாய் இருப்பதால் ஏலத்தில் மிகப்பெரிய வீரர்களை தங்கள் வசம் இழுக்க பஞ்சாப் விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியின் புதிய விக்கெட் கீப்பர் யார்? கே.எல்.ராகுலா? ரிஷப் பண்ட்டா?
ஐபிஎல் ஏலம் இன்று மதியம் நடைபெற உள்ள நிலையில் சென்னை அணியின் புதிய விக்கெட் கீப்பராக யாரைத் தேர்வு செய்வார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.