”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அதானி, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில், கூட்டத் தொடர் தொடங்கும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தூள்ளார்.
பிரதமர் பேசியது என்ன ?
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று நினைப்பவன் நான் என்றும் ஆனால் அதற்கு இடையூறு செய்யும் வகையிலேயே காங்கிரஸ் கட்சி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகாராஸ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அதிகார பசி மட்டுமே கொண்ட கட்சிகளை வாக்காளர்களாகிய மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதுமே பேசியதில்லை என்றும் விமர்சித்துள்ள பிரதமர் மோடி, மக்கள் இதற்கான பாடத்தைதான் அந்த கட்சிக்கு தொடர்ந்து கற்பித்து வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.