மேலும் அறிய

NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?

நாதக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்குவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். 

அந்த முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்! இதுநாள் வரையில் என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும்" என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அழகாபுரம் தங்கதுரை கடந்த 15 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் தங்கத்துரையின் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி வெளியே வருவார்கள் என கூறப்படுகிறது. இது சேலம் மாவட்டத்தை மட்டுமின்றி தமிழக முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?

தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி என்ற பிரிவின் சேலம் மாவட்ட செயலாளர் வைரம் என்பவர் கட்சியில் இருந்து விலகினார். இதேபோல், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணைத்தலைவர் ஜீவானந்தம் உட்பட 40 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை கோவை நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன், வடக்கு தொகுதி தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி, வணிக பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக அக்கச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.  

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வந்த நிலையில், தற்போது சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்குவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளது: "தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அ.ஜெகதீஷ் M.Sc.,M.Phil.,DMI,Ph,D,. ஆகிய நான் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுவரை என்னோடு களமாடிய உண்மையான களபோராளிகளுக்கும் என்னுடைய புரட்சிகர நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமாக இருந்தாலும் சமீப கால செயல்பாடுகள் கட்சியின் உள் கட்டமைப்பில் கவனம் செலுத்தாது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் அடிப்படையில் கனத்த இதயத்தோடு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். கொள்கை கோட்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்றும் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் நினைவில் தமிழ் தேசியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Arrest?: எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
எப்பவோ பத்த வச்ச வெடி இப்போதான் வெடிக்குது.. விரைவில் சீமான் கைது.?
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
PM Modi : ”என்னை மன்னிச்சிடுங்க” மக்களிடம் பிரதமர் மோடி கேட்ட திடீர் மன்னிப்பு.. ஏன் தெரியுமா?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
GATE 2025 Answer key: வெளியான கேட் தேர்வு ஆன்சர் கீ; காண்பது, ஆட்சேபிப்பது எப்படி?
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Embed widget