FIFA World Cup 2022: தமிழர்கள் உருவாக்கிய பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடல் - கௌரவித்த கத்தார் அரசு!
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துவரும் கத்தார் நாட்டுக்கு நன்றி செலுத்தும் விதமாக கத்தாரில் நடைபெறும் பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை உருவாக்கி தமிழர்கள் வெளியிட்டுள்ளனர்.

மத்தியகிழக்கு நாடான கத்தார் 22 வது கால்பந்து உலகக்கோப்பை போட்டியை உலக நாடுகள் பிரமிக்கும் வகையில் நேர்த்தியாக நடத்தி வருகிறது. கால்பந்து போட்டிக்கான பிஃபா அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமின்றி, கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டுள்ளனர். உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் பார்வை கத்தார் தோகாவை நோக்கியே உள்ளது.
கத்தாரில் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பணிநிமித்தமாக சென்று வசித்து வருகின்றனர். அதற்கு, கத்தார் நாட்டுக்கு தமிழர்கள் சார்பில் நன்றி செலுத்தும் விதமாக கத்தார் - உலக கால்பந்து போட்டிக்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை குன் ஷாகிரான் என்ற ஆங்கில தீம் பாடலை வெளியிட்டுள்து. இந்தப்பாடலை தமிழ்மகன் அவார்ட்ஸ்-ஸின் நிறுவனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் இயக்கி உள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த சாம் ஜோசப் என்பவரின் பாடல் வரி மற்றும் இசையில், சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஆனந்த் அரவிந்தாக்சன் பாடியுள்ளார்.
இந்த பாடலுக்கு அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழர்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக அந்நாட்டின் அமைச்சர் மற்றும் தூதர அதிகாரிகள் முன்னிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளதுடன், கத்தார் மீடியா கார்ப்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய தொலைக்காட்சியான கத்தார் டிவி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருதுமொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை பெருமை படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி முகநூலில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ பல ஆயிரம் லைக்குகளை அள்ளி வருகிறது.
மயிலாடுதுறையில் சோழமண்டல அளவிலான சதுரங்க போட்டி; பொதுப் பிரிவினர் மற்றும் சிறார்களுக்கான போட்டியில் 254 பேர் பங்கேற்று விளையாடினர்.
மயிலாடுதுறையில் மாவட்ட சதுரங்க கழகம் நடத்திய சோழமண்டல அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி பள்ளியில் சதுரங்க கழக மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டிகளை, மாவட்ட சதுரங்க கழக செயற்குழு உறுப்பினர் பவுல்ராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் பொதுப் பிரிவினருக்கு தனியாகவும், 9, 11, 13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. சோழமண்டல அளவிலான இப் போட்டிகளில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் 254 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் பொது பிரிவினருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

