Kohli New Look: கிங் கோலியின் நியூ கெட்டப்..! லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்...!
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட்கோலியின் புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட்கோலி. மைதானத்தில் பேட்டிங்கில் மிரட்டுவது காட்டுவது மட்டுமின்றி, ஸ்டைலிலும் விராட்கோலி மிரட்டுபவர். வெள்ளித்திரையில் மிரட்டும் ஹீரோக்களைப் போல அவ்வப்போது பல்வேறு கெட்டப்புகளிலும், விதவிதமான ஆடைகளிலும் அசத்துபவர்.
ஆசிய கோப்பையில் சுமார் 1000 நாட்களுக்கு பிறகு சதமடித்து தனது பார்முக்கு திரும்பிய ரன்மெஷின் விராட்கோலி, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். இதையடுத்து, விராட் கோலியின் புதிய கெட்டப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ஆர்வத்துடன் விராட்கோலியின் புதிய புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
பாலிவுட் பிரபலங்களின் சிகையலங்கார கலைஞராக விளங்கும் ரஷீத் சல்மானிதான் விராட்கோலியை இந்த புதிய கெட்டப்பிற்கு மாற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலககோப்பைத் தொடரில் விராட்கோலி இந்த புதிய கெட்டப்பில்தான் களமிறங்க உள்ளார். ரஷீத்சல்மானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட்கோலியின் புதிய கெட்டப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கிங் கோலி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலி, சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி விளம்பர நடிகராகவும் வலம் வருகிறார். இந்தியாவின் முன்னணி பிராண்டுகள் பலவற்றினும் மாடலாகவும் விராட்கோலி உள்ளார்.
இந்தியாவிலே விளம்பரம் மூலமாக அதிகளவில் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் விராட்கோலி ஆவார். இந்தியாவில் மட்டுமின்றி கிரிக்கெட் உலகிலே அதிகளவில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் வீரரும் விராட்கோலியே ஆவார். அதுமட்டுமின்றி விராட்கோலியை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
விராட்கோலியை இன்ஸ்டாகிராமில் மட்டும் 214 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். கிரிக்கெட் வீரர்களிலே இன்ஸ்டாகிராமில் அதிகளவு பாலோவர்ஸ் கொண்ட வீரர் விராட்கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் லைக்குகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்
மேலும் படிக்க : Gautam Gambhir: தினேஷ் கார்த்திக்கா..? ரிஷப் பண்ட்டா? உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கம்பீரின் தேர்வு யார்..?
மேலும் படிக்க : Mohammad Shami : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கொரோனா...! ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகல்..!