Team India T20I Record : ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றி..! பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா புதிய சாதனை..!
ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றிகள் பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா தட்டிப்பறித்துள்ளது.
![Team India T20I Record : ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றி..! பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா புதிய சாதனை..! Team India Breaks Pakistan’s Record For Most T20I Wins In Calendar Year After Winning T20 Series Against AUS Team India T20I Record : ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றி..! பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா புதிய சாதனை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/26/fd3109b1c0839447b57402200865c7211664174395401102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி நேற்றைய போட்டியில் 2-1 என்ற கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி 20 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்திய அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமையை பாகிஸ்தானிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளது.
இந்திய அணி 2022ம் ஆண்டான நடப்பாண்டில் மட்டும் இதுவரை 28 டி20 போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி கடந்தாண்டு 20 டி20 போட்டியில் வெற்றி பெற்று இதுவரை முதலிடத்தில் இருந்தது. நடப்பாண்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் இலங்கை அணிகளை அவர்களது உள்நாட்டிலே ஒயிட்வாஷ் செய்தது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடந்த ஜூலை மாதம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது.
ஆசிய கோப்பை தோல்விக்கு முன்பாக 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை மீண்டும் வீழ்த்தியது. தற்போது ஆஸ்திரேலிய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. ரோகித்சர்மா இந்திய அணியின் டி20 கேப்டனாக பொறுப்பேற்றது முதல் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது.
ரோகித்சர்மா கேப்டனான பிறகு இந்திய அணி அவரது தலைமையில் இதுவரை 42 போட்டிகளில் ஆடி 33 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தோனி 41 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க : Watch Video : "தமிழன்டா எந்நாளும்..!" தினேஷ் கார்த்திக்கை கவுரவப்படுத்திய இந்திய அணி..!
மேலும் படிக்க : Watch video : வேற வெலவ் செலிபிரேஷன்..! படிக்கட்டிலே வெற்றியை கொண்டாடிய கோலி - ரோகித்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)