மேலும் அறிய
Vijay TV DD Net Worth: சின்னத்திரையில் வெயிட்டான சம்பளம் வாங்கும் டிடியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி சொத்து மதிப்பு குறித்த தகவல்
1/8

சில நடிகைகள் படிக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானது போல, திவ்யதர்ஷினி பள்ளியில் படிக்கும் போதே தொகுப்பாளினியாக மாறியவர். அதன் பிறகு ரெக்கை கட்டிய மனசு என்ற சீரியல் மூலமாக நடிகையானார். இந்த சீரியல் மூலமாக ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற டிடி தனது திறமை, வசீகரிக்கும் தோற்றம், ஆளுமை ஆகியவற்றின் காரணமாக அடுத்தடுத்த வாய்ப்புகளை கைப்பற்றினார்.
2/8

சில திரைப்படங்களில் இவரை நடிக்க வைக்க வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்கள் முயற்சி செய்த போதும், அந்த வாய்ப்புகளை நாசுக்காக தவிர்த்து விட்டார். விஜய் டிவியில் அடுத்தடுத்து வரிசையாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவரின் , ஒவ்வொரு ஷோவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
3/8

பிஸியாக இருக்கும் போதே தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பரை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நட்பாக இருக்க ஒத்து போன இவர்களின் மனசு கணவன் - மனைவியாக ஒத்து போகவில்லை. திருமணம் ஆன, 3 வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
4/8

அதன் பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போதிலும் இவருக்கு, rheumatoid arthritis (முடக்கு வாதம்) என்ற அரியவகை நோய் பாதிப்புக்கு இருந்ததால், வெகு நேரம் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமல் போனது. நிற்க மட்டும் அல்ல டிடியால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காரவும் முடியாது.
5/8

சமீப காலமாக இவர் சில முக்கிய நிகழ்வுகளை மட்டுமே தொகுத்து வழங்கினாலும் இவருக்கு அமைவதற்கு என தனி இடம் கொடுக்கப்பட்டு அதில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
6/8

மேலும், சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய தர்ஷினி அடிக்கடி ரீல்ஸ், வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் டிடி இன்று தன்னுடைய 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
7/8

சிறு வயதில் குடும்ப கஷ்டத்திற்காகவும், படிப்பு செலவுக்காகவும் தன்னுடைய அக்கா பிரியதர்ஷினியை பார்த்து நிகழ்ச்சி தொகுப்பை கையில் எடுத்த டிடியில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 10 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார். GT ஹாலிடேஸ் என்கிற ட்ராவல் நிறுவனம் மூலம் நல்ல லாபம் பார்க்கும் டிடி அதன் மூலம் குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் பணம் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
8/8

டிடியின் சொத்து மதிப்பு, 8 முதல் 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. டிடியில் சகோதரி பிரிய தர்ஷினி, தற்போது எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருகிறார். டிடியின் சகோதரர் பைலட்டாக இருப்பதாக கூறப்படுகிறது.
Published at : 17 Feb 2025 09:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion